Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 30 ஜனவரி, 2020

இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரனா வைரஸ் ! சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு வைரஸ் தாக்கம்

#BREAKING  :இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரனா வைரஸ் ! சீனாவில் இருந்து கேரளா வந்த மாணவருக்கு வைரஸ் தாக்கம்



சீனாவில் தற்போது புதியதாக  “கொரனா வைரஸ்” எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த காய்ச்சல் முதலில் அந்நாட்டில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. 

தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் போன்ற நகரங்களிலும் பரவி உள்ளது.இந்த வைரஸ் மாற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இதன் விளைவாக இந்தியாவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இந்நிலையில் சீனாவிலிருந்து கேரளா திரும்பிய மாணவருக்கு கொரனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய மாணவர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. சீனாவில் உள்ள உகான் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள மாணவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக