நெல்லை
மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கீழ் எர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த
பூதப்பாண்டி மகன் பரமசிவன். 34 வயதாகும் இவர் கூலி வேலை செய்து வருவதாகக்
கூறப்படுகிறது.
இவர் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் தனது தந்தைக்கு எதிராக வழக்கு தொடர கோரிக்கை மனு ஒன்றைத் கொடுத்துள்ளார். அந்த மனுவில் தன் தந்தைக்குப் பல கோடி சொத்துக்கள் இருப்பதும். தன் தந்தை தனக்குத் திருமணம் செய்து வைக்காமல் தன்னை அவர் வீட்டிலும் இருக்கவிடாமல் ஆட்களை வைத்து மிரட்டி வருவதாகவும் தன் தந்தையின் சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்க வேண்டியதும். தனக்கு ஒரு பெண் பார்த்து திருமணம் நடத்தி வைக்க வேண்டியும் விண்ணப்பித்துள்ளார்.
இந்த கோரிக்கை மனுவின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. இந்த மனு கோட்டில் விசாரணைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டதா? இல்லையா? என்ற தகவல் தெரியவில்லை. ஆனால் கோட்டில் தனக்குப் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டி ஒருவர் அளித்த மனு தற்போது வைரலாக பரவி வருகிறது.
அதே நேரத்தில் அவர் தனது மனுவில் அவரது தந்தையிடம் உள்ள சொத்து மதிப்பை குறிப்பிடும் போது எண்ணில் 10 லட்சம் எனவும் எழுத்தில் ஒரு கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அர்த்தம், 10 லட்சமா?, ஒருகோடியா? அல்லது 10 லட்சம் கோடியா எனத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக