Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

பிஎஸ் 4 வாகனங்களில் பிஎஸ்-6 எரிவாயு- எப்படி இது சாத்தியம்..?

ங்களிடம் பிஎஸ்-4 வாகனம் இருந்து, அதில் பிஎஸ் 6 எரிவாயுவை பயன்படுத்தப்படுவதில் குழப்பம் நீடிக்கிறதா..? அப்போது இந்த பக்கத்தை விரிவாக படியுங்கள். குழப்பம் தீர்ந்து தெளிவு பிறக்கும்.


பிஎஸ்-6 எரிவாயுவில் இயங்கும் பிஎஸ்-4 வாகனங்களுக்கு முறையான பராமரிப்பு தேவை. அப்போது தான் பிஎஸ்-4 வாகனங்கள் எவ்வித பாதிப்பையும் சந்திக்காமல், பிஎஸ்-6 எரிவாயுவுடன் சாதாரணமாக இயங்கி வரும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

நடப்பாண்டில் மிக முக்கியமான நிகழ்வு ஆட்டோமொபைல் துறையில் நிகழவிருக்கிறது. காற்று மாசுபாட்டுக்கு தீர்வு காணும் பொருட்டு, வரும் ஏப்ரல் 1 முதல் பிஎஸ்-6 தரத்தில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களை மட்டுமே வாங்கவும், விற்கவும் அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதற்காக கடந்தாண்டு முதலே பல்வேறு வாகன நிறுவனங்கள் பிஎஸ்-6 தரத்தில் வாகனங்களை தயாரிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன. மாருதி சுஸுகி, மஹிந்திரா, ரெனோ, ஹூண்டாய், ஹீரோ, ஹோண்டா, டிவிஎஸ் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஏற்கனவே பிஎஸ்-6 வாகன விற்பனையை 2019 முதலே துவங்கிவிட்டன.

பிஎஸ்-4 வாகனங்களை விட பிஎஸ்-6 வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை பெரிய சதவீதத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது. மேலும் காற்று மாசுபாடு ஏற்படுவது குறையும். அதற்கு ஏற்றவாறான தொழில்நுட்பங்கள் பிஎஸ்-6 எஞ்சினுக்கு வழங்கப்படுகின்றன.

பிஎஸ் 6 வாகனங்களை பயன்படுத்தப்படும் போது அதற்கேற்ற பிஎஸ் 6 எரிவாயுவை பயன்படுத்தினால் மட்டுமே இந்த நோக்கம் முழுமை அடையும். ஆனால், இன்னும் பிஎஸ் 6 திட்டம் அமலுக்கு வரவில்லை என்பதால், நாட்டிலுள்ள பலரும் பிஎஸ் 4 வாகனங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர்.

எனினும், பெரும்பாலான எரிவாயு நிலையங்களில் பிஎஸ் 6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட பெட்ரோல், டீசல் தான் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பிஎஸ் 4 வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பிஎஸ் 6 எரிவாயுவையே தங்களுடைய வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நடைமுறை பலருக்கும் குழப்பத்தை அளிக்கிறது. பிஎஸ் 4 வாகனங்களில் பிஎஸ் 6 விதிகளுக்குரிய எரிவாயுவை நிரப்பினால் ஏதேனும் கோளாறு ஏற்படுமா என்று சந்தேகம் நிலவுகிறது. இதை நேரடியாக கூறவேண்டும் என்றால், ஆம். பிஎஸ் 4 வாகனங்களில் பிஎஸ் 6 எரிவாயுவை பயன்படுத்தினால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் தான்.

ஆனால் முறையாக வாகனங்களை பராமரிப்பு செய்வது வந்தால் எவ்வித பிரச்னையும் இல்லை என்பது இந்த பிரச்னையில் இருக்கும் தெளிவான தீர்வாகும். அதில் எவ்வித குழப்பத்தையும் வாடிக்கையாளர்கள் பெற வேண்டாம்.

பிஎஸ்-4 பெட்ரோல் வாகனங்களில் பிஎஸ்-6 எரிவாயு பயன்படுத்தப்படும் போது எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இது பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்கு மாறுபடுகிறது. பிஎஸ்-6 எஞ்சின் பயன்படுத்தப்படும் பிஎஸ்-4 வாகனங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்பட வேண்டும்.

காரணம், டீசல் எஞ்சின்களில் உராய்வு காப்புப் பொருளாக சல்பர் பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய பிஎஸ்-6 தரத்திலான டீசல்களில், பிஎஸ்-4 டீசல் வெர்ஷனில் இருப்பதை விட 5 மடங்கு குறைந்தளவில் சல்பர் இடம்பெற்றுள்ளது.

இது பிஎஸ்-4 எஞ்சினுக்குள் போகும் போது பாதிப்பு ஏற்படுத்தக்கூடும். ஆனால் இந்த பிரச்னை நீண்ட தூரம் பயணிக்கும் வாகனங்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடும். இதனுடன், பிஎஸ் 6 டீசல் எரிவாயு பயன்படுத்தப்படும் பிஎஸ்-4 டீசல் எஞ்சின் வாகனங்கள் எந்தவித மெக்கானிக்கல் பாதிப்புகளையும் பெறாமல் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

இதனால் பிஎஸ்-4 வெர்ஷன் டீசல் வாகனங்களுக்கு முறையான பராமரிப்பு மிகவும் அவசியம். ஒருவேளை பராமரிப்பில் சிறு குறைபாடு ஏற்பட்டாலும் பிரச்னை பெரிதாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால் பிஎஸ்-6 எரிவாயுவை கொண்ட பிஎஸ்-4 வாகனங்களில் அதிக கவனம் கொள்ளுங்கள். முறையான பராமரிப்பு வழிகளை பின்பற்றுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக