>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

    காட் ஃபாதர் சினிமா விமர்சனம்

     Image result for காட் ஃபாதர்  சினிமா விமர்சனம்
    ரு கேங்ஸ்டரிடம் இருந்து தன் மகனை காப்பாற்ற போராடும் சாதாரண தந்தையின் போராட்டமே கதை.

    சக்தி வாய்ந்த சிங்கம் பாவப்பட்ட மானை வேட்டையாடத் துடிப்பது தான் காட் ஃபாதர். கேங்ஸ்டர் மருதுசிங்கத்தின் (லால்) மகன் கொஞ்சம், கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறான். அவனை காப்பாற்ற அதே வயதுடைய பையனின் உடல் உறுப்புகளை பொருத்த வேண்டும். அப்பொழுது அதியமானின்(நட்டி) மகனான அஸ்வந்தை (சூப்பர் டீலக்ஸ் படம் புகழ்) கண்டுபிடிக்கிறார்கள். அஸ்வந்தை கடத்தி அவரின் உடல் பாகங்களை எடுக்க முடிவு செய்கிறார்கள்.

    மருதுசிங்கத்தின் ஆட்கள் அஸ்வந்தை தேடி வரும்போது அவர்களின் எண்ணத்தை புரிந்து கொள்கிறார் அதியமான். அதியமான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து யாரையும் உள்ளேயும் செல்லவிடாமலும், வெளியேயும் செல்லவிடாமலும் அராஜகம் செய்யும் ரவுடிகளிடம் இருந்து தன் மகனை எத்தனை நாட்கள் தான் காப்பாற்றுவார் அந்த பாவப்பட்ட தந்தை?

    ஒரு அபார்ட்மென்ட்டில் நடக்கும் த்ரில்லர் படம். மகனை காக்க எதையும் செய்யத் தயாராக இருக்கும் இரண்டு தந்தைகள். சரியான அளவில் ஆக்ஷன், சென்ட்மென்ட் காட்சிகளை வைத்து நம்மை இருக்கையின் நுனிக்கு வந்து படம் பார்க்க வைக்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.

    காட் ஃபாதர் ஏமாற்றம் அளிக்கவில்லை என்றாலும் முழு திருப்தியும் அளிக்கவில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதியில் வந்த சில காட்சிகள் பரபரக்கும் கதைக்கு ஸ்பீட் பிரேக் போடுவதாக உள்ளது.

    அதியமானுக்கு அழகான குடும்பம் இருக்கிறது என்பதை காட்ட ஒரு பாட்டு, மருதுசிங்கம் மோசமானவன் என்பதை காட்ட கொலைகள் என்று காட்டியது தேவையில்லாதது. நாம் யூகிக்கும்படி சில விஷயங்கள் இருந்தது கதைக்கு மைனஸ்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக