Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 25 மார்ச், 2020

கொரோனாவை தொடர்ந்து சீனாவில் உதயமானது மற்றொரு வைரஸ்...


கொரோனா வைரஸ் வெடிப்பு பயத்திற்கு மத்தியில், பிற நோய்களும் அவற்றின் கொடூரமான தலைகளைத் தூக்கி எறியத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்தும் பன்றிக்காய்ச்சல் மற்றும் பறவைக் காய்ச்சல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன, அதேவேலையில் மற்றொரு கொடிய வைரஸ் தொடர்பான தகவல் சீனாவிலிருந்து வந்துள்ளது.

சீனாவின் குளோபல் டைம்ஸ் செவ்வாய்க்கிழமை (மார்ச் 24), யுன்னான் மாகாணத்தைச் சேர்ந்த நபர் திங்களன்று பேருந்தில் வேலைக்காக ஷான்டோங் மாகாணத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த கொடிய வைரஸால் இறந்தார் என்று ட்வீட் செய்துள்ளது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 32 பேரும் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.

குளோபல் டைம்ஸ் இதுகுறித்து ட்விட் செய்கையில்., "யுன்னன் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் திங்களன்று சாண்டோங் மாகாணத்திற்கு ஒரு பட்டய பேருந்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது இறந்தார். அவர் ஹான்டவைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளது.

ஹன்டவைரஸ்கள் என்பது வைரஸ்கள் கொண்ட ஒரு குடும்பமாகும், அவை முக்கியமாக கொறித்துண்ணிகளால் பரவுகின்றன மற்றும் பிற நோய்களை மக்களுக்கு ஏற்படுத்தக்கூடும் வல்லமை படைத்தது என்றும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இது ஹான்டவைரஸ் நுரையீரல் நோய்க்குறி மற்றும் சிறுநீரக நோய்க்குறி உடன் ரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த நோய் சிறுநீர், மலம், மற்றும் கொறித்துண்ணிகளின் உமிழ்நீர் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே பாதிக்ககூடும்.
 
தலைவலி, தலைச்சுற்றல், குளிர் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஆகியவற்றுடன் சோர்வு, காய்ச்சல் மற்றும் தசை வலிகள் ஆகியவை எச்.பி.எஸ் அறிகுறிகளில் அடங்கும், இது இருமல் மற்றும் மூச்சுத் திணறலுக்கு வழிவகுக்கும் மற்றும் ஆபத்தானது என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக