Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 26 மார்ச், 2020

உஷார்! கொரோனாவை பயன்படுத்தி அடுத்த பஞ்சாயத்து!


கொரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 பரவல் மற்றும் பீதி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை தொடர்ந்து வீட்டுக்குள் தங்கியிருக்கும் பயனர்களைக் குறிவைக்க சைபர் குற்றவாளிகள் புதிய உத்திகளைக் கண்டுபிடித்துள்ளனர். அப்படியானதொரு சமீபத்திய மோசடி தான் - இலவச நெட்ஃபிக்ஸ் பாஸ்!

உங்களில் சிலருக்கு நெட்பிக்ஸ் நிறுவனம் கோவிட் -9 விளைவாக வீட்டுக்குள் அடைபட்டு கிடக்கும் மக்களுக்கு இலவச சந்தாவை வழங்குவதாக அறிவித்துள்ளது என்கிற தகவலோடு சேர்த்து அதை பெற இதை கிளிக் செய்யவும் என்கிற இணைப்பும் (லிங்க்) வந்து இருக்கலாம்.

ஒருவேளை வந்திருந்தால், அல்லது வந்தால் குறிப்பிட்ட லிங்க்கை தெரியாமல் கூட கிளிக் செய்ய வேண்டாம். ஏனெனில் வெளிப்படையாக, இது ஒரு மோசடி ஆகும்.

நெட்ஃபிக்ஸ் செய்தித் தொடர்பாளர், பிசினஸ் இன்சைடர் தளத்திற்கு கொடுத்துள்ள தகவலின்படி, நெட்பிலிக்ஸ் நிறுவனம் எந்த விதமான இலவச சந்தாவையும் அறிவிக்கவில்லை என்று உறுதிப்படுத்தி உள்ளார்.

நேற்று முதல் "COVID-19 தொற்றுநோய் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை எதிர்கொள்ளும் பொதுமக்களுக்கு, எங்கள் நெட்பிலிக்ஸ் தளத்திற்கான முற்றிலும் இலவச அணுகலை நாங்கள் வழங்குகிறோம்" என்று எழுதப்பட்ட மோசடி மெசேஜ் ஆங்காங்கே கிடைத்து கொண்டு இருக்கிறது.

அந்த மெசேஜை தொடர்ந்து ஒரு லிங்க்கும் கிடைக்கிறது. அது பயனர்களுக்கு இலவச நெட்ஃபிக்ஸ் பாஸைப் பெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு கணக்கெடுப்பில் சேருமாறு உங்களை கேட்கிறது.

முன்பு கூறியது போல, இது முற்றிலும் போலியான மற்றும் மோசடியான ஒரு தகவல் ஆகும். ஹேக்கர்கள் கோவிட்-19 ஐ குறிவைத்து, அதைச் சுற்றி பெரிய அளவிலான ஆர்வத்தை தூண்டும் பல்வேறு ஏமாற்று வழிகளை கண்டறிந்த வண்ணம் உள்ளன.

சமீபத்திய செக்பாயிண்ட் அறிக்கையின்படி, இணையத்தில் கோவிட்-19 தொடர்பான களங்களின் எண்ணிக்கையில் 50% வளர்ச்சி காணப்படுகிறது. இந்த களங்களில் பெரும்பாலானவை தீங்கிழைக்கும் (மால்வேர்) மற்றும் சந்தேகத்திற்குரியவை ஆகும்.


சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள் கோவிட்லாக் (CovidLock) என்ற ஆப்பை கண்டனர். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கிடைக்கும் இந்த ஆப், கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை வழங்குவதாகக் கூறப்பட்டது.

ஆனால் பின்னர் அது இன்ஸ்டால் செய்யப்படும் தொலைபேசிகளில் ransomware-ஐ நிறுவியதாக கண்டறியப்பட்டது. இதேபோல உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதை நோக்கமாகக் கொண்ட பல வகையான போலி கொரோனா வைரஸ் கண்காணிப்பு தளங்களும் உள்ளன. ஆகவே பயனர்கள் மிகவும் கவனமாகவு, எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேற்றுக்கொள்ளப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக