Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 18 மார்ச், 2020

பச்சை கொடி காட்டிய யெஸ் பேங்க்.. நாளை மாலை முதல் பணம் எடுத்துக் கொள்ளலாம்..!

 யெஸ் வங்கி இயல்பு நிலைக்கு திரும்பும்
மாலை 6 மணி முதல் யெஸ் பேங்க் மீதான தடை நீக்கப்பட்டவுடன், வங்கிக் கிளைகள் அனைத்தும் முழு வீச்சில் செயல்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் யெஸ் வங்கியில் ஏடிஎம் மற்றும் கிளைகளும் போதுமான பணத்தினை வைத்திருப்பதாக யெஸ் வங்கியின் புதிய நிர்வாகியான பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார். மார்ச் 18 ஆம் தேதி மாலை முதல் வங்கிக் கிளைகள் முழு வீச்சில் செயல்பட தொடங்கும்.
 
சேவைகள் செயல்பாட்டுக்கு வரும்
அதிலும் முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், எங்களது குழு சார்பாக வாடிக்கையாளர்களிடம் பேசி வருகிறோம். நெஃப்ட் மற்றும் ஆர்டிஜிஎஸ் உள்ளிட்ட ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளும் செயல்பாட்டுக்கு வரும். இவ்வாறு யெஸ் பேங்கினை மீட்டெடுக்க ஆர்பிஐ-யின் பங்கு முக்கிய பங்காக உள்ளது.
யெஸ் வங்கி இயல்பு நிலைக்கு திரும்பும்
அதிலும் யெஸ் வங்கி விரைவில் திவால் ஆகிவிடும் என்று அஞ்சிய வாடிக்கையாளர்கள் தங்களது டெபாசிட் தொகையை கூட எடுக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், ஆக வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் இருங்கள். யெஸ் வங்கி விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் மாறி மாறி உறுதியளித்தன.
யெஸ் வங்கியில் முதலீடு
இந்த நிலையில் தான் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய எஸ்பிஐ-யும் மற்ற சில தனியார் வங்கிகளும் முன்வந்தன. இதனால் யெஸ் வங்கியின் வீழ்ச்சி தடைபட்டுள்ளது. ஏப்ரல் 3-ம் தேதி வரை தனது கட்டுப்பாட்டுக்குள் யெஸ் வங்கி இருக்கும் எனவும், வாடிக்கையாளர்கள் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்கக் கூடாது எனவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.
நெருக்கடியில் இருந்து விடுதலை
ஆனால் எஸ்பிஐ-யும் நான்கு தனியார் துறை வங்கிகளும் யெஸ் வங்கியில் முதலீடு செய்ய முன்வந்தன. இதனால் யெஸ் வங்கி நிதி நெருக்கடியிலிருந்து தப்பியுள்ளது. இதைத் தொடர்ந்து யெஸ் வங்கி இயங்குவதற்குத் தேவையான மூலதனம் கிடைத்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
வளர்ச்சி பாதைக்கு திரும்பும்
மேலும் ரிசர்வ் வங்கி ஆளுநரான சக்திகாந்த தாஸ் மார்ச் 16ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த போது, விரைவில் யெஸ் வங்கி வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனவும், வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும் எனவும் உறுதியளித்தார். இந்த நிலையில் அதோடு யெஸ் வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் நாளை மாலை முதல் பணத்தை எந்த வித பிரச்சனையும் இல்லாமல் எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இனியும் தனியார் வங்கி தான்
மேலும் யெஸ் வங்கி தொடர்ந்து தனியார் வங்கியாகவே இயங்கும் என்று சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். யெஸ் வங்கிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த போது, ஆன்லைன் பரிவர்த்தனைகளும் ஏடிஎம் சேவையும் முடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை மாலை முதல் இதற்கு பச்சைக் கொடி காட்டவுள்ளது யெஸ் வங்கி.
ட்விட்டரில் கருத்து
இந்த நிலையில் யெஸ் வங்கியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் 18ஆம் தேதி மாலை முதல் வங்கிச் சேவை முழு வீச்சுடன் செயல்படும் எனவும், அனைத்து வங்கிக் கிளைகளையும் வாடிக்கையாளர்கள் அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்படியோ யெஸ் வங்கி பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்தாச்சில்ல. அப்புறம் என்ன? சந்தோஷம் தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக