Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 6 ஏப்ரல், 2020

ரொம்ப போர் அடிக்குதா? Nikon உடன் இலவசமாக போட்டோகிராபி கற்றுக்கொள்ள நல்ல சான்ஸ்!


புகைப்படம் மற்றும் வீடியோவைப் பற்றி இலவச வகுப்பு

புகைப்படம் மற்றும் வீடியோவைப் பற்றி அறிய ஆர்வமுள்ள எவரும் நிக்கன் ஆன்லைன் கோர்ஸ் தகவல்களை இலவசமாக அணுகுவதற்கு நிக்கன் ஒரு அறிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆன்லைன் வகுப்புகள் நிக்கன் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் பயன்படுத்தும் நிக்கன் கேமராக்களில் இருக்கும் அம்சங்களை நன்கு அறிந்துகொள்ள வழிவகுக்கும் என்று நிக்கன் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டுமே

இந்த இலவச ஆன்லைன் வகுப்பு ஏப்ரல் 30ம் தேதி வரை மட்டுமே பொருந்தும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல், இந்த ஆன்லைன் வகுப்புகள் எதுவும் இலவசமாகக் கிடைக்காது என்றும், அதன் சந்தா கட்டணம் வழக்கம்போல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் நிக்கன் அறிவித்துள்ளது.

வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

நிக்கன் நிறுவனம் வழக்கமாக ஒவ்வொரு வகுப்பிற்கும் சுமார் $ 15 முதல் $ 50 வரை தனது ஆன்லைன் சந்தாதாரர்களிடம் இருந்து கட்டணமாக வசூலிக்கிறது. ஆனால், இப்பொழுது ஒரு மாத காலத்திற்கு மட்டும் நிக்கன் இந்த சேவையை இலவசமாக வழங்க முன்வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசம் வேண்டுமா? அப்போ இதை கட்டாயம் செய்யணும்

ஆர்வமுள்ள வாசகர்கள் உங்கள் போட்டோகிராபி திறனை வளர்த்துக்கொள்வதற்கு உடனே நிக்கன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லலாம். உங்களுடைய இலவச ஆன்லைன் வகுப்புகளைப் பார்ப்பதற்கு முன்பு பயனர்கள் தங்களின் பெயர் விபரம் மற்றும் மின்னஞ்சல் முகவரி விபரம் ஆகியவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. உங்கள் விபரங்களைப் பதிவு செய்த பின்னர், உங்கள் வகுப்புகளை இலவசமாக ஸ்ட்ரீம் செய்துகொள்ளலாம்.

கேமரா அடிப்படைகளையும் கற்றுக்கொடுக்கும் நிக்கன்

இந்த ஆன்லைன் வகுப்புகள் அனைத்தும் சிறந்த போட்டோக்ராபர் மற்றும் நல்ல தொழில்முறை தெரிந்த நபர்களால் கற்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வகுப்புகள் நிகான் தயாரிப்புகளில் கவனம் செலுத்துகின்றன என்பதையும் தாண்டி, கேமராக்கள் படங்களை எவ்வாறு கைப்பற்றுவது என்பது உட்படப் புகைப்படத்தின் அடிப்படைகளையும் கற்பித்துகொடின்றன.

வீட்டில் உள்ளவர்களுக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள அறிய வாய்ப்பு

உலகளாவிய தொற்றுநோயான கொரோனா வைரஸ் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகவும் நிக்கன் தெரிவித்தார். இந்த வகுப்புகள் வீட்டில் உள்ளவர்களுக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவும் என்று நிறுவனம் நம்புகிறது. இந்த வகுப்புகளில் கலந்து கொள்ள நீங்கள் நிக்கன் கேமராவை வைத்திருக்க வேண்டியதில்லை, வீட்டிலேயே இருக்க மக்களை இது ஊக்குவிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக