Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 13 மே, 2020

பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிதியுதவி; தமிழக அரசு அறிவிப்பு...

பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர், நாவிதர், பண்டாரம், காதுகுத்துபவர்கள், குயவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளதாவது., "கொரோனா வைரஸ் நோய் தொற்றினைத் தடுக்க பல்வேறு தீவிர நோய்த் தடுப்பு பணிகளையும், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

ஊரடங்கு காலகட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களின் பங்குத்தொகை/ தட்டுக்காணிக்கை மட்டுமே பெறும் 2,108 அர்ச்சகர்கள்/ பட்டாச்சாரியார்கள்/ பூசாரிகளுக்கும், ஒரு கால பூஜை நிதியுதவி பெறும் திருக்கோயில்களில் பணிபுரியும் 8,340 அர்ச்சகர்கள் / பட்டாச்சாரியார்கள் / பூசாரிகளுக்கும், திருக்கோயில்களில் ஊதியமின்றி பங்குத்தொகை மட்டுமே பெற்றுக்கொண்டு பணிபுரியும் நாவிதர், பண்டாரம் / பண்டாரி, மாலைக்கட்டி, பரிச்சாரகர்/ சுயம்பாகம், வில்வம், காது குத்துபவர்/ ஆசாரி, நாமவளி, மிராசு கணக்கு, கங்காணி திருவிளக்கு, முறைகாவல் மேளம், நாதஸ்வரம், குயவர், புரோகிதர், தாசநம்பி போன்ற பணியாளர்களுக்கு ஏற்கனவே சிறப்பு நேர்வாக ரூ.1,000/- ரொக்க நிவாரணமாக வழங்கப்பட்டு விட்டது.

ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மேற்குறிப்பிட்ட பிரிவினருக்கு மேலும் ரூபாய் 1,000/- ரொக்க நிவாரணத் தொகையாக திருக்கோயில் நிதியிலிருந்து வழங்கப்படும்." என குறிப்பிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக