Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 29 ஜூன், 2020

கூகுளில் தேடும் தகவல்கள் இனி இத்தனை மாதங்களில் தாமாகவே அழிந்துவிடும்.!

கூகுள் நிறுவனம், தனது பயனர்களுக்கு தேடுதல் தகவல்கள் (Search history) மற்றும் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல் ஆகியவற்றை 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது.

உலகில் எவ்வளவு தேடுதல் வலைத்தளங்கள் இருந்தாலும், பயனாளர்கள் விரும்பி பயன்படுத்திவது, கூகுள் தேடுதளமே ஆகும். ஏனேனில் கூகுள், தனது பயனார்குளுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான மக்கள் கூகுளை தேர்வு செய்து வருகின்றனர்.

Organizing / Adding Google Apps - Gmail Community

கடந்த சில மாதங்களில், நுகர்வோர்கள் மற்றும் US மாநில அட்டர்னி ஜெனரலின் பல வழக்குகள் கூகுள் டேட்டா சேகரிப்பு அடிப்படையில், பல மோசடி செய்ததாக குற்றம் சாற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு ஆண்டுகளில் கலிபோர்னியா மற்றும் ஐரோப்பா நாட்டில் பல இணைய நிறுவனங்கள், தங்களின் தனியுரிமை நடைமுறைகளை சரிசெய்யத் தூண்டின.

இதன் காரணமாக, கூகுள் நிறுவனம் தனது பயனாளர்களின் தேடுதலை 18 மாதங்களுக்கு பிறகு தாமாகவே நிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனை நீக்குவதற்கான வசதியை நீங்களே தேர்வு செய்யலாம் எனவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் இந்த புதுப்பிக்கப்பட்ட அமைப்புகளுக்கு கீழ், தங்களது புதிய பயனர்களின் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், 36 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும். மேலும் லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல்கள், 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது.

அதுமட்டுமின்றி, இன்காக்நைட்டோ (incognito tab) மூலம் தேடுனால் அந்த தகவல்களை கூகுள் வைத்திருக்காது எனவும் தெரிவித்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக