ராஜாவும், மணியும் நண்பர்கள். அவர்கள் இருவருக்கும், தாய், தந்தையர் மற்றும் சுற்றார் கிடையாது. ராஜாவுக்கு கண் தெரியாது. அதேபோல் மணியால் நடக்க முடியாது. அவர்கள் வாழ்ந்த கிராமத்தில் கிடைத்த வேலையைச் செய்து, கிராமத்தில் உள்ளோர் கொடுப்பதை சாப்பிட்டு வாழ்ந்து வந்தனர்.
ஒரு நாள் அவர்களுக்குப் பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழா பற்றி தெரிய வந்தது. இருவருக்கும் அங்கே செல்ல மிகுந்த ஆசை. அந்த ஊருக்குச் செல்ல மிகுந்த தொலைவு நடக்க வேண்டும். என்னால் நடக்க முடியாது, உன்னால் பார்க்க முடியாது. நமக்கு ஏன் இந்த ஆசை? என்று மணி வருத்ததுடன் சொன்னான்.
ராஜா சிறிது நேரம் தீவிரமாக யோசித்தான். பின் நண்பா! உன்னால் நடக்கத்தான் முடியாது. ஆனால் கூர்மையாகப் பார்க்க முடியும். என்னால் பார்க்கத்தான் முடியாது. ஆனால் வெகுதூரம் நடக்க முடியும். நீ என் தோள் மேல் ஏறிக் கொள்.

எனக்கு வழியைச் சொல்லிக்கொண்டே வா. நாம் இருவரும் திருவிழாவிற்குச் சென்று வரலாம் என்றான் ராஜா. இருவரும் மகிழ்ச்சியாக திருவிழாவிற்குச் சென்று வந்தார்கள்.
நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
குட்டிக்கதைகளும் - கட்டுரைத்தொடர்களும்
நீதி :
முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக