Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 23 ஜூலை, 2020

Samsung கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி அறிமுகம்! விலை என்ன தெரியுமா?


குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+
சாம்சங் நிறுவனம் தனது போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலான சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி அறிமுகத்தை இறுதியாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 5 ஜி இணைப்புடன் வருகிறது, மேலும் இது 4 ஜி மாடல் ஸ்மார்ட்போனில் காணப்படுவது போல ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் போன் பற்றிய விலை மாறும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.
ஸ்மார்ட்போனின் முக்கிய சிறப்பம்சமாக சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் ஃப்ளெக்ஸ் பயன்முறையில் கேமரா புதுப்பிப்புடன் வருகிறது. இதன் மூலம், பயனர்கள் கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி மூலம் அதிக மற்றும் கீழ் கோணத்தில் புகைப்படம் எடுக்க முடியும்.
கேமராவின் மாதிரிக்காட்சி சாளரத்தைச் சாதனத்தின் மேலிருந்து கீழ் பாதிக்கு மாற்ற ஃப்ளெக்ஸ் பயன்முறையில் இருமுறை கிளிக் செய்ய வேண்டும். மீதமுள்ள விவரக்குறிப்புகள் அனைத்தும் சாம்சங் கேலக்ஸி இசட் ஃபிளிப்பின் 4 ஜி மாடலை போலவே இருக்கிறது. சாம்சங் நிறுவனம் 5ஜி பயனர்களுக்காக இந்த ஸ்மார்ட்போன் மாடலை தற்பொழுது அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி சிறப்பம்சம்
  • 6.7' இன்ச் முழு எச்டி பிளஸ் டைனமிக் அமோலேட் இன்பினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளே
  • பின்புற பேனலில் 1.1' இன்ச் இரண்டாம் நிலை 300 x 112 பிக்சல் கொண்ட சூப்பர் AMOLED டிஸ்பிளே உள்ளது
  • ஒன்யூஐ 2.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்
  • 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  • 12 மெகாபிக்சல் இரட்டை பிக்சல் சென்சார் மற்றும் 12 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் லென்ஸ்
  • 10 மெகாபிக்சல் செல்பி கேமரா
  • 5 ஜி என்எஸ்ஏ / எஸ்ஏ, வைஃபை 802.11ax (வைஃபை 6)
  • புளூடூத் 5.0
  • யூ.எஸ்.பி டைப்-சி
  • என்.எஃப்.சி
  • ஜி.பி.எஸ்
  • 15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 3,300 எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்தியா சந்தையில் தோராயமாக ரூ. 1,08,300 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் 5 ஜி ஸ்மார்ட்போன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விருப்பத்துடன் கிடைக்கிறது. இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி முதல் மிஸ்டிக் கிரே மற்றும் மிஸ்டிக் வெண்கல பிரான்ஸ் நிறங்களில் அமெரிக்காவில் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்தியாவில் விரைவில் களமிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக