Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

ரூ .12 க்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கிமீ செல்லும் எலக்ட்ரிக் மொபைட்

புனேவைச் சேர்ந்த  ஸ்டார்ட்அப் நிறுவனமான  டெக்கோ எலெக்ட்ரா "சாதி" என்ற புதிய  எலக்ட்ரிக் மொபைட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாகனங்களின் பரிமாற்றத்தில்  நாளுக்குநாள் புதிய கண்டுபிடிப்புகள் வருகின்றன. இந்நிலையில் புனேவை சேர்ந்த புதிய நிறுவனமான டெக்கோ எலெக்ட்ரா "சாதி" என்ற புதிய எலக்ட்ரிக் மொபைட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 60-70 கி.மீ. இதில் வரை செல்ழும் திறன் கொண்டது. 1.5 யூனிட் மின்சாரம் பயன்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, டெக்கோ எலெக்ட்ரா கூறுகையில், மொபட் 60 கி.மீ.க்கு வெறும் ரூ.12 இல் செல்ல முடியும். இதில் வாகனம் திருடப்படுவதை தடுக்கும் அலாரம், வேகமாக சார்ஜ் ஏறும் வசதி மற்றும் 3 வருடத்திற்கான வாரண்ட்டி போன்ற சிறப்பம்சங்களை வழங்குகிறது. இதன் விலை ரூ. 57,697 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து சந்தைக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக  புனேவில் வலம் வர அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் வாகனங்களின் போக்குவரத்து பயன்பாடு அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் எரிபொருட்களின் விலையும் அதிகரித்த வண்ணமே உள்ளது. இந்த கொரோனா ஊரடங்களிலும் விலை ஏற்றம் குறைந்த பாடில்லை. இதனால் சாமானிய மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இது போன்ற புதிய மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கையில், சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!