மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ஜனவரி 1-ம் தேதியில் இருந்து, மின்னணு முறையில் மேற்கொள்ளப்படும் பணம் செலுத்துதலுக்கு கட்டணம் விதிக்க கூடாது என தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், தற்போது சில வங்கிகள் ஒரு குறிப்பிட்ட பண பரிவர்த்தனைகளுக்கு மேல் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள் மற்றும் பணம் செலுத்துதலுக்கு கட்டணம் வசூலிக்கின்றன என புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனால், மத்திய நேரடி வரிகள் வாரியம், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், அனைத்து வங்கிகளும் மின்னணு முறை பண பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது. ஜனவரி 1-ம் தேதிக்கு பின் வசூலித்த கட்டண தொகையை திருப்பி அளிக்க வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக