மத்திய பணியாளா் பயிற்சித் துறை வெளியிட்ட உத்தரவில், 1972-ம் ஆண்டு மத்திய சிவில் சர்வீசஸ் விதிகள் மற்றும் அடிப்படை விதிகள் படி ஒரு அரசு ஊழியரின் செயல்திறனை ஆய்வு செய்யவும், பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு கொடுக்கவும் அதிகாரம் உள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு அரசு ஊழியரின் பணி பதிவேட்டை பராமரிக்க வேண்டும். ஒரு ஊழியர் 50 முதல் 55 வயதை எட்டிய உடன் அவரது பணி பதிவேட்டை ஆய்வு செய்து, அவர் திறமையற்றவராக இருந்தாலும், ஊழல் செய்பவராக இருந்தால் பொதுநலன் கருதி ஓய்வு கொடுக்க வேண்டும்.
இது தண்டனை அல்ல, கட்டாய ஓய்வு முறை ஆகும். முன்கூட்டியே ஓய்வு கொடுக்கும் ஊழியருக்கு 3 மாதங்கள் முன்பே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் அல்லது 3 மாத சம்பளம் மற்றும் படிகளை கொடுக்க வேண்டும். திடீரென அரசு ஊழியரின் செயல்திறன் குறைந்தால், அவர் பணி பதிவேட்டை ஆய்வு செய்து ஓய்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக