Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

முக பராமரிப்பில் தேனை பயன்படுத்துவதால் உண்டாகும் பலன்கள்...!!

சுத்தமான தேனை கண்டறிய எளிய வழிமுறை ...




தேனைக் கொண்டு அடிக்கடி சருமத்திற்கு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், நாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளான சுருக்கங்கள், முதுமைக் கோடுகள், முகப்பரு, கரும்புள்ளிகள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்கலாம்..

 1 டீஸ்பூன் தேனில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
இப்படி செய்வதால், சருமம் புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் மின்னும்.


 நன்கு கனிந்த பப்பாளியை மசித்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனால் சரும வறட்சி நீக்கப்பட்டு, முதுமைக் கோடுகள் தெரிவது தடுக்கப்படும்.

 1 டேபிள் ஸ்பூன் தேனில் 1 டேபிள் ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் முகத்தை நீரில் கழுவி, பின் அந்த கலவையைக் கொண்டு சருமத்தை வட்ட சுழற்சியில் ஸ்கரப் செய்து 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவ, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்
புள்ளிகள் அகற்றப்படும்.


 1 டேபிள் ஸ்பூன் தேனுடன் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால், சருமத்தில் வறட்சியினால் ஏற்பட்ட சுருக்கங்கள் நீங்கி, சருமத்தின் இளமைத்தன்மை தக்க வைக்கப்படும்.

 முக பொலிவை பெற தேன் மற்றும் பால் கலந்த கலவையை முகத்திற்கு தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை போக்கி முகத்திற்கு புது
பொலிவை தருகிறது.


 ஆரஞ்சு மற்றும் தேன் ஆகியவை பனிகால சரும பாதுகாப்புக்கு ஏற்றவை. வீட்டில் கார்ன் ப்ளவர் இருந்தால் அதனுடன் தயிர் கலந்த கலவையை தினசரி
உடம்பில் தடவி, காயவிட்டு பின்னர் கழுவி வர சருமம் பளபளக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக