Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

ஒரு நல்ல செய்தி

ஒரு ஊரில் யார் ஒருவர் நல்ல செய்தி கூறினாலும் நல்ல செய்தி சொன்னவருக்கு அவ்வூரில் உள்ள மக்கள் அனைவரிடமும் ஒன்றாகச் சேர்ந்து பணம் வசூலித்து அன்பளிப்பாகக் கொடுப்பது வழக்கம். ராமன், அந்த மக்களின் ஒருவிதமான மூடநம்பிக்கைக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒருநாள் அவர் சந்தை கூடும் இடத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த ஒர் இடத்தில் நின்று கொண்டு அன்பார்ந்த பொதுமக்களே உங்களுக்குச் சொல்வதற்காக அருமையான நல்ல செய்தி ஒன்றை வைத்திருக்கிறேன். எனக்குப் பரிசு தருவதற்காக, உடனே பணம் வசூலியுங்கள் என்று கூச்சல் போட்டார்.

ராமன் ஒரு செய்தியினைச் சொல்லுகிறார் என்றால் உண்மையிலேயே அது நல்ல செய்தியாகத் தான் இருக்கும் என்று நம்பிய மக்கள் அவசர அவசரமாக பணம் வசூலித்து ஒரு கணிசமான தொகையை ராமன்விடம் கொடுத்தனர்.

அந்த அன்பளிப்புத் தொகையை வாங்கி எண்ணி சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்ட ராமன் மக்களை நோக்கி அன்பார்ந்த பொதுக்களே நான் கூற இருக்கும் நல்ல செய்தி இதுதான் இந்த ராமன் ஒரு மகனுக்குத் தந்தையாகியிருக்கேன் என்று கூறிவிட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!