Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 10 செப்டம்பர், 2020

கும்ப ராசியில் சூரியன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!


கும்ப ராசியின் அதிபதி சனிபகவான் ஆவார். சூரியன் மகர ராசியில் தான் கொண்டுள்ள உறவு நிலையையே இங்கு கொண்டு இருந்தாலும் அவருடைய செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாற்றத்தினால் உண்டான சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு :

சம்பாதிப்பதில் வல்லவர்கள். எந்நேரத்திலும் தொழில் சம்பந்தமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

கற்பனைத்திறன் மிகுந்தவர்கள்.

புதுமையான எண்ணங்களும், சிந்தனைகளும் கொண்டவர்கள்.

எதைப் பற்றியும் கவலைக் கொள்ளாதவர்கள்.

பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

எந்த நிலையையும் சமாளிக்கும் மன தைரியம் உடையவர்கள்.

குறைகளை பற்றி கவலைக்கொள்ளாமல் அவர்களை ஏற்றுக்கொள்வார்கள்.

இறை நம்பிக்கையும், விதியின் மீது நம்பிக்கையும் கொண்டவர்கள்.

உழைப்பிற்கேற்ற வருமானம் இல்லாத போதும் அதை பொருட்படுத்தாமல் உழைக்கக் கூடியவர்கள்.

நண்பர்கள் மூலம் சாதகமான சூழல் உண்டாகும்.

அனைத்தும் உணர்ந்தவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.

மனைவியின் மீது மிகுந்த அன்பும் அவருக்கு கட்டுபட்டவராகவே இருப்பார்கள்.

மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயமான சூழல் அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!