Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 அக்டோபர், 2020

மன அமைதி எதுவரை? சிறந்த வரிகள்... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

------------------------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்...!!

-------------------------------------------------------

அருண் : தலைவர் எதுக்கு அவர் மனைவி பண்ண பொங்கலை கட்சி ஆபீஸ்க்கு எடுத்துக்கிட்டு போறாரு..? 

குமார் : போஸ்டர் ஒட்டுறதுக்காம்..!

அருண் : 😀😀

-------------------------------------------------------

கவின் : எதுக்குடா நான் தூங்குறேன்னு டீச்சர்கிட்ட சொன்ன?

நவீன் : நீதானே, நான் தூங்குறேன்... டீச்சர் வந்தா சொல்லுன்னு சொல்லிட்டுத் தூங்குன...

கவின் : 😠😠

-------------------------------------------------------

ஆசிரியர் : கட்டுரையை சரியா எழுத மாட்டியா?... அடிச்சுத் திருத்தி, அடிச்சுத் திருத்தி எழுதியிருக்க...

மாணவன் : செய்வனத் திருந்தச் செய்-ன்னு நீங்கதானே அடிக்கடி சொல்லுவீங்க.

ஆசிரியர் : 😀😀

-------------------------------------------------------

கவி : டூத் பேஸ்டை தலைக்குத் தேய்க்கக்கூடாது!

சுபி : ஏன்?

கவி : ஏன்னா, அது ஈறுகளைப் பாதுகாக்கும்!

சுபி : 😆😆

-------------------------------------------------------

சிறந்த வரிகள்...!! 

-------------------------------------------------------

முயற்சியின் பாதைகள் கடினமானவை. ஆனால், முடிவுகள் இனிமையானவை.

தொடர்ந்து முயலுங்கள்... கனவுகள் நனவாகும் வரை.

நீ உன் கருத்தில் ஒன்றுபட்டு இருந்தால் இந்த உலகமே எதிர்த்தாலும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது. 

அதுபோலவே உன் கருத்தில் நீயே முரண்பட்டு இருந்தால் உலகமே உன்னை ஆதரித்தாலும் உன் வாழ்வில் நீ வெற்றி அடைய முடியாது.

நாம் உதவியவர் நமக்கு நிச்சயம் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு இல்லாதவரை நமக்கு மன அமைதி உண்டு.

-------------------------------------------------------

கெடுதல்...!!

-------------------------------------------------------

🌟 பார்க்காத பயிரும் கெடும்...

🌟 பாசத்தினால் பிள்ளை கெடும்...

🌟 கேளாத கடனும் கெடும்...

🌟 கேட்கும்போது உறவு கெடும்...

🌟 தெகட்டினால் விருந்து கெடும்...

🌟 ஓதாத கல்வி கெடும்...

🌟 ஒழுக்கமில்லா வாழ்வு கெடும்...

🌟 சேராத உறவும் கெடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!