Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 1 ஜனவரி, 2021

உட்காரமுடியாத தரை எது? இன்றைய கடி... சிரிக்கலாம் வாங்க... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------

சிரிக்கலாம் வாங்க...!

------------------------------------------------

கணவன் : சாமிக்கிட்ட என்ன வேண்டிக்கிட்ட?

மனைவி : அடுத்த பிறவியிலும் நீங்கதான் என் கணவரா வரணும்-னு வேண்டிக்கிட்டேன்..

கணவன் : என் மேல அவ்வளவு பிரியமா?

மனைவி : இல்ல, சமையல் வேலைக்கு வேற ஆள் தேட வேண்டாமேனுதான்.

கணவன் : 😏😏

------------------------------------------------

தளபதி : மகாராணியின் படுக்கை அறைக்குள் நுழைந்த எதிரி, முகம், கை, காலெல்லாம் ரத்த காயத்தோடு வருகிறான் மன்னா..

மன்னன் : நான் தான் வரேன்னு மகாராணி நினைத்திருப்பாள்.

தளபதி : 😅😅

------------------------------------------------

அர்த்தங்கள் அறிவோம்...!

------------------------------------------------

ஆசாரம் - ஒழுக்கம்

 

வியவகாரம் - வழக்கு

 

பிராயச்சித்தம் - கழுவாய்

 

பிரத்தியட்சம் - கண்கூடு

 

வானப்பிரஸ்தநிலை - புறத்தாறு

 

சுதந்திரம் - உரிமை

 

அவயவம் - உறுப்பு

 

அமிர்தம் - சாவா மருந்து

 

நீதி - நடுவு

 

முக்தி பெறுதல் - வீடுபேறு

 

எங்களின் இந்த பயணம் உங்களால் மட்டுமே சாத்தியம்...

------------------------------------------------

இன்றைய கடி...!!

------------------------------------------------

 

உட்காரமுடியாத தரை எது..?

.

.

.

.

.

புளியோதரை

------------------------------------------------

அபசகுனம்... குட்டிக்கதை...!!

------------------------------------------------

அக்பர் தினமும் தூங்கி எழுந்தவுடன் அவர் எதிரில் உள்ள விநாயகர் படத்தை தான் பார்ப்பார்.

 

ஒரு நாள் அவர் கண் விழிக்கும்போது சிப்பாய் ஒருவர் வந்து விட்டார். அன்று முழுவதும் அக்பருக்கு பல‌ பிரச்சனைகள் வந்தது. எல்லாம் அந்த‌ சிப்பாய் முகத்தில் விழித்ததால் தான் என்று அந்த‌ சிப்பாயை தூக்கில் போட‌ உத்தரவிட்டார்.

 

இந்த‌ விஷயம் பீர்பாலுக்கு தெரிய‌ வந்தது. பீர்பால் மன்னரிடம் ஏன் அவரை தூக்கிலிடப்போகிறீர்? என்று கோபமாக கேட்டார்.

 

அதற்கு அக்பர் இவனுடைய‌ முகத்தில் விழித்ததால் எனக்கு ஏகப்பட்ட‌ பிரச்சனைகள் வந்தது, இவனுடைய‌ முகம் அபசகுனமானது என்று கூறினார்.

 

அதற்கு பீர்பால் பயங்கரமாக‌ சிரித்தார்.

 

'ஏன் சிரிக்கிறாய்?" என்று அக்பர் கோபமாக‌ பீர்பாலை பார்த்து கேட்டார்.

 

அதற்கு பீர்பால் 'நீங்கள் அவனுடைய‌ முகத்தில் விழித்ததால் உங்களுக்கு பிரச்சனைகள் மட்டும் தான் வந்தது. ஆனால் அவன் உங்கள் முகத்தில் விழித்ததால் அவனுக்கு உயிரே போகப்போகிறதே, அப்போ யாருடைய‌ முகம் அபசகுனமானது என்று நினைத்து சிரித்தேன்" என்றார்.அக்பர் தன் தவறை உணர்ந்து அந்த‌ சிப்பாயை விடுதலை செய்தார்.‌

 

 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக