Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 20 மே, 2021

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..? 22-ஆம் தேதி ஆலோசனை.




தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழு கூட்டம் வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது. இந்த கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் சனிக்கிழமை காலை 11:30 மணிக்கு நடைப்பெற உள்ளது.


இந்த கூட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி அதிகாலை 4 மணியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதா..? அல்லது சில தளர்வுகள் கொடுப்பதா..? என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.


அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தின் படி முதலமைச்சர் தலைமையில் அனைத்துக்கட்சி குழு அமைப்பில் 13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!