-------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-------------------------------------
🦁ஒரு சிங்கம், 🐺ஒரு ஓநாய், 🦊ஒரு நரி மூணும் கூட்டு வைச்சிக்கிட்டு வேட்டைக்கு போச்சாம்.
வேட்டையில ஒரு கொழுத்த 🦌மான் கிடைச்சுதாம்.
🦁சிங்கம் 🐺ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லுச்சாம்.
🐺ஓநாயும் மூணு சம பங்கா பிரிச்சுதாம்.
🦁இதை பார்த்துக்கிட்டு இருந்த சிங்கம், காட்டு ராஜாவான எனக்கு சமமானவங்களா இவனுங்க? எனக்கு மரியாதை இல்லையா? அவனுங்களுக்கு சம பங்கா? அப்படின்னு நினைச்சிக்கிட்டு பட்டு-னு ஓநாயை அறைஞ்சுதாம்.
🐺ஓநாய் அடி வாங்கிட்டு மயங்கி விழுந்திடுச்சி.
🦁சிங்கம் 🦊நரியைக் கூப்பிட்டு பங்கு பிரிக்கச் சொல்லுச்சி.
🦊நரியும் பவ்யமா மானோட காது ஒன்னை மட்டும் தனக்கு எடுத்துக்கிட்டு, மிச்சத்தை சிங்கம் பக்கமா தள்ளுச்சி.
🦁சிங்கம் ஆச்சரியமாகி, நரியே, எப்படி உனக்கு இவ்ளோ பவ்யமும், மரியாதையும் வந்துச்சி? அப்படின்னு கேட்டுச்சி.
🦊நரி இன்னும் பணிவா சொல்லுச்சாம், அதோ அங்கே மயங்கி கிடக்கிற ஓநாய் கிட்டே கத்துக்கிட்டேன், அப்படின்னு சொல்லிட்டு ஓடிச்சிடுச்சி.
நீதி : 👉தகாத நட்பு கூடாது.
-------------------------------------
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக