Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 21 மே, 2021

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.




அமைவிடம் :

இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது.

மாவட்டம் :

அருள்மிகு தில்லை நடராஜர் திருக்கோயில், சிதம்பரம், கடலூர் மாவட்டம்.

எப்படி செல்வது?

கடலூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்ல பேருந்து மற்றும் வாடகை வண்டி வசதிகள் உள்ளன. 

கோயில் சிறப்பு :

பஞ்சபூதத்தலத்தில் இது ஆகாயத்திருத்தலம் ஆகும். வானத்தில் கலந்த சிவத்தை கண்ணால் காண இயலாது எனும் தத்துவத்தை சிதம்பர ரகசியமாக கொண்ட ஆலயம்.

இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவுருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருவமாகவும் அருள்பாலிக்கிறார்.

சித்த சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ள சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்பெற்று ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. மூர்த்தி இல்லாமலேயே தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டு காட்சியளிக்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான்.

ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அதனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம். 'மனிதா! உன்னிடம் ஒன்றுமே இல்லை" என்பது தான், அந்த ரகசியத்தின் பொருள்.

கோயில் திருவிழா :

மார்கழி திருவிழா, திருவாதிரை உற்சவம், ஆனித்திருமஞ்சனம் ஆகியவை இத்தலத்தில் மிக விஷேசமாக நடக்கும்.

சித்திரை முதல் பங்குனி முடிய பன்னிரு மாதங்களில் மாதப்பிறப்பு, பிரதோஷம், வெள்ளிக்கிழமை, திருவாதிரை, கார்த்திகை, அமாவாசை, பௌர்ணமி ஆகிய நாட்களில் இரவு விழா நடைபெறும்.

வேண்டுதல் :

மனநிம்மதி கிடைக்க, உடல் சம்பந்தப்பட்ட நோய் தீர, கலைகளில் தேர்ச்சி பெற விரும்புவோர் இத்தலத்தின் மேல் அதீத ஆர்வம் கொண்டு பிரார்த்தனை செய்தால் அவர் விரும்பிய வண்ணம் சிறப்பான எதிர் காலம் அமையும் என்பது நம்பிக்கை.

மேலும் குழந்தை வரம் மற்றும் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

நேர்த்திக்கடன் :

நடராஜருக்கும், சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும், பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர்.

சுவாமிக்கு அனைத்து அபிஷேகங்களும் செய்யலாம். உலர்ந்த தூய வஸ்திரம் சாற்றலாம். அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாற்றுதல் ஆகியவற்றையும் செய்யலாம். 

கோயில் பிரசாதம் :

சம்பா சாதம், கத்தரிக்காய் கொத்சு, உளுந்து வடை, கல்கண்டு சர்க்கரைப் பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!