-------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------
சுரேஷ் : மேடம்.... இந்த கல்யாண கலாட்டாவுல என் பொண்டாட்டியைத் தொலைச்சுட்டேன்... கொஞ்ச நேரம் என்கூட பேசிட்டிருக்க முடியுமா?
பெண் : (கோபத்துடன்) ஏய் மிஸ்டர் என்னை என்னன்னு நெனைச்சுட்டீங்க? நான் எதுக்கு உங்ககூட பேசணும்?
சுரேஷ் : சாரி, மேடம்... தப்பா நெனைச்சுக்காதீங்க. அழகான ஒரு பொண்ணோட நான் பேசிட்டு இருக்கறப்பல்லாம் எங்கிருந்தாலும் உடனே ஓடிவந்து என் முன்னால ஆஜராயிடுவா என் பொண்டாட்டி அதுக்காகச் சொன்னேன்;.
பெண் : 😏😏
-------------------------------------
சிங்கத்தின் கர்வம்...!!
-------------------------------------
🦁 ஒரு காட்டில் இருந்த சிங்கத்திற்கு தன் பலத்தின் மீது கர்வம் ஏற்பட்டது.
🦁 வரிசையாக கரடி, மான், முயல் முதலிய பிராணிகளைப் பார்த்து, 'இக்காட்டில் யார் பலசாலி?" என்று கேட்டது.
🦁 அப்பிராணிகளும் பயத்துடன், 'சந்தேகமில்லாமல் நீங்கள் தான்," என்று பதிலளித்தன.
🦁 சிங்கம் பின்னர் மேலும் கர்வத்துடன் அதே கேள்வியை ஒரு யானையிடம் கேட்டது.
🦁 யானை ஏதும் பேசாமல் சிங்கத்தைத் ஒரேயடியாக தூக்கி எறிந்து விட்டது.
🦁 சிங்கம் பயத்துடன் ஓடிக்கொண்டே எதிரே வந்த மிருகங்களிடம் சொன்னது, 'முட்டாள், பதில் தெரியாவிட்டால் அவன் பாட்டிற்குப் போக வேண்டியது தானே? இப்படியா முரட்டுத்தனமாக நடப்பது?"
-------------------------------------
விடுகதைகள்...!!
-------------------------------------
1. நடந்தவன் நின்றான், கத்தியை எடுத்து தலையைச் சீவினேன், மறுபடியும் நடந்தான். அவன் யார்?
2. அரிவாளால் வெட்டி வெட்டி அடுப்பிலே வெச்சாலும் மூச்சே விட மாட்டான். அவன் யார்?
விடை :
1. பென்சில்
2. விறகு
-------------------------------------
குறளும்... பொருளும்...!!
-------------------------------------
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
பொருள் :
பயனோடு பொருந்தாத பண்பு இல்லாத சொற்களைப் பலரிடத்தும் சொல்லுதல், அறத்தோடு பொருந்தாமல் நன்மையிலிருந்து நீங்கச் செய்யும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக