Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஜூலை, 2021

வெற்றியை தீர்மானிப்பது யார்? அந்த நாள் ஞாபகம்... - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

---------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------

கணவன் : உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக்கூடாதா?
மனைவி : அதனால உங்களுக்கென்ன?
கணவன் : நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே...
மனைவி : 😛😛
---------------------------------------
பாபு : ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?
கோபு : நான்தான் சொன்னேனே... அவரு பதினெட்டு 'பட்டி"க்குச் சொந்தக்காரருன்னு...
பாபு : 😐😐
---------------------------------------
வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
---------------------------------------
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது.

எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத் தளபதிக்கு போரை இழக்கமாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கிஞ்சித்தும் இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.

என்னதான் நம்பிக்கை இருந்தாலும், வீரர்களெல்லாம் தனி ஆளாய் என்ன செய்ய முடியும்?

கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள்.

உடனே தளபதி வீரர்களை அழைத்து, 'சரி வீரர்களே... நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுகிறேன். அதில் தலை விழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பி விடுவோம்... வெற்றியா தோல்வியா.. நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்... சரியா?"

'ஆ.. நல்ல யோசனை... அப்படியே செய்வோம்..."

நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.

தலை...!

வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக சண்டையிட்டனர் எதிரி நாட்டவர்களோடு.

அட.. என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது!

துணைத் தளபதி வந்தான். 'நாம் வென்றுவிட்டோம்... கடவுள் தீர்ப்பை மாற்ற முடியாதல்லவா..." என்றான் உற்சாகத்துடன்.

'ஆமாம்... உண்மைதான்" என்றபடி அந்த நாணயத்தை துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.

நாணயத்தின் இரு பக்கங்களிலும் தலை!
---------------------------------------
அந்த நாள் ஞாபகம்...!!
---------------------------------------
12 மணி குல்பி..

ளரனெயல சாலை...

மரத்தடி அரட்டை...

தூங்க விடாத குறட்டை...

புது நோட் வாசம்..

மார்கழி மாசம்..

ஜன்னல் இருக்கை..

கோவில் தெப்பகுளம்..

நுஒhiடிவைழைn அப்பளம்..

முறைப்பெண்ணின் சீராட்டு...

எதிரியின் பாராட்டு..

தோசைக்கல் சத்தம்..

சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்...

முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்...

மிதிவண்டி வைத்திருந்தோம்...

😍😍 அந்த நாட்கள்... ஆஹா அற்புதமான நாட்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக