Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 14 ஜூலை, 2021

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சத்தியமங்கலம், பண்ணாரி, ஈரோடு மாவட்டம்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா
அமைவிடம் :

அனைத்து சக்திகளுக்கும் ஆதாரமாக இருப்பது பராசக்தியாகும். அப்பராசக்தியே கொங்குநாட்டின் வடமேற்கு எல்லையருகில் மைசூர் செல்லும் பாதையில் பிரதானமாக வீற்றிருக்கும் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த காவல் தெய்வமாகும். பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வாய்ந்த கோயிலாகும்.

மாவட்டம் :

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சத்தியமங்கலம், பண்ணாரி, ஈரோடு மாவட்டம்.

எப்படி செல்வது?

சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்தியமங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.

கோயில் சிறப்பு :

இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் இது. நான்கு பக்கமும் வனத்தால் சூழப்பட்ட திருக்கோயில்.

பார்வையில் மறக்கருணை, அதையும் மீறி திருமுகம் பொழியும் அறக்கருணை... தேடி வந்து தன்னை வழிபடும் பக்தர்களுக்கு, அவர்கள் நினைத்தது நினைத்தபடி நடந்தேற வரம் வாரி வழங்கும் கற்பகத் தருவாய் காட்சித் தருகிறாள் அருள்மிகு பண்ணாரி மாரியம்மன். 

வனத்திடையே அர்த்த, மகா, சோபன மண்டபம் மற்றும் சுற்றுப்பிரகார மண்டபங்களுடன் அமைந்த நீண்ட கோபுரத்தோடு விளங்கும் இக்கோயில், பக்த கோடிகளின் உள்ளத்தைக் கவர்வதாகும்.

தமிழ்நாடு தவிர கர்நாடக மாநில மக்களிடையேயும் பெரிய அளவில் புகழ் பெற்ற தலம்.

இக்கோயிலில் மிக சிறப்பு வாய்ந்த குண்டம் திருவிழா தமிழ்நாட்டில் மிகப்புகழ் பெற்றது.

கோயில் திருவிழா : 

பங்குனி குண்டம் பெருந்திருவிழா, அமாவாசை உள்ளிட்ட விஷேசங்கள், இவை தவிர வாரத்தின் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மேலும் தீபாவளி, பொங்கல், தமிழ் ஆங்கில வருடப்பிறப்பின் போதும் இக்கோயிலில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

பிரார்த்தனை :

கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை கண்டறிந்தவர்கள் உடனே குணமடைகிறார்கள். இவை தவிர திருமணபாக்கியம், கை, கால் உறுப்புகள் குறைபாடுள்ளவர்கள், விவசாய செழிப்பு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் பிரார்த்தனை கைகூடுகிறது.

நேர்த்திக்கடன் : 

நேர்த்திக்கடனாக (கண்ணடக்கம்) உருவத்தகடுகள் (கை, கால், கண்) வாங்கி அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள். அக்னிகுண்டம் இறங்குதல், மெரவனை வேல் எடுத்து சுத்துதல், கிடா வெட்டுதல், அம்மனுக்கு விளக்கு போடுதல், அம்மனுக்கு புடவை சாற்றுதல், ஆகியவை தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகள் செய்தல் ஆகியவற்றை இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் முக்கிய நேர்த்திக்கடன்களாக செய்கின்றனர். 

பிரசாதம் :

இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக