Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 6 அக்டோபர், 2021

இந்தியாவில் அறிமுகம் ஆன விண்டோஸ் 11 அப்டேட்: எப்படி அப்டேட் செய்வது?

 பல்வேறு அம்சங்களுடன் புதிய அப்டேட்

மைக்ரோசாப்ட் இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பான விண்டோஸ் 11 இன்று உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்கு வெளியிடப்பட்டிருக்கிறது. விண்டோஸ் 10 இயங்குதளத்தை தற்போது பயன்படுத்தி வரும் நபர்கள் தற்போதைய அப்டேட்டை இலவசமாக பதிவிறக்கம் செய்து மேம்படுத்தம் செய்யலாம். விண்டோஸ் 10 வெளியான போது இதவே எங்களின் கணினி இயங்குதளத்தின் கடைசி பதிப்பு என நிறுவனம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த புதுப்பிப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு அம்சங்களுடன் புதிய அப்டேட்

இந்த புதிய அப்டேட்டில் பல்வேறு அம்சங்கள் இருக்கிறது. ஸ்டார்ட் மெனுவை தேர்வு செய்யும் போது அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகள் பட்டியல் மெனுவில் காட்டப்படும். அதேபோல் மைக்ரோசாப்ட் தனது புதிய நேரடி ஸ்டோரேஜ் வசதியை கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் சென்ட்ரல் ப்ராசசர் மூலமாக இன்றி நேரடியாக ஸ்டோரேஜ் டிரைவர்களுடன் கிராபிக்ஸ் கார்டை அணுகும் வசதி இருக்கிறது. இது கேமிங் பிரியர்களுக்கு பெரிதளவு உதவியாக இருக்கும்.

விண்டோஸ் 11 பதிப்பு

விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் விண்டோஸ் 11-க்கு இலவசமாக மேம்படுத்த முடியும். தங்களது சாதனத்தை சரிபார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தி செக் செய்து கொள்ளலாம். விண்டோஸ் 11 பதிப்பு விரைவில் வர இருக்கிறது. முன்னதாக விண்டோஸ் 10 பயனராக இருக்கும்பட்சத்தில் மைக்ரோசாப்டின் புதிய இயக்க முறைமை மேம்படுத்தலாம். இது இலவசமாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நிறுவனம் நேற்று நடைபெற்ற மெய்நிகர் நிகழ்வுக்கு பிறகு வலைப்பதிவு இடுகையில் இதுகுறித்து அறிவித்தது.

இலவச அப்டேட்டுக்கு தகுதியுள்ளதா

விண்டோஸ் 11 புதுப்பிப்பை வழக்கமான புதுப்பிப்பு முறையில் புதுப்பிக்கலாம். சரியான தேதி தற்போதுவரை தெரியவில்லை. தங்களது தற்போதைய விண்டோஸ் 10 கணினி விண்டோஸ் 11 இலவச அப்டேட்டுக்கு தகுதியுள்ளதா என்பதை பார்க்க பிசி ஹெல்த் செக் பயன்பாட்டை பயன்படுத்தலாம். இதை பதிவிறக்கம் செய்ய விண்டோஸ்.காம் தளத்தை அணுகவும்.

புதிய கணினி வாங்கும் பயனர்கள்

புதிய கணினி வாங்கும் பயனர்கள் அனைவரும் விண்டோஸ் 11 அப்டேட்டுக்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். மேலும் தற்போதுவரை விண்டோஸ் 10 ஓஎஸ்-ஐ புதுப்பிக்காமல் இருப்பவர்கள் வருந்த வேண்டும். தற்போதுவரை விண்டோஸ் 10 அப்டேட் கிடைக்கிறது இதை அப்டேட் செய்து விண்டோஸ் 11 பயன்படுத்த தயாராகலாம். விண்டோஸ் 11 முன்பே சோதிக்க விரும்பும் பயனர்கள், விண்டோஸ் இன்சைடர் திட்ட பயனர்களுக்கு அடுத்த வாரம் முதலே ஆரம்ப பீட்டா பதிப்பு கிடைக்கும். ஜூலை மாதத்தில் பொது பீட்டா வெளியிடப்படும். பீட்டா நிறுவம் பயனர்கள் தங்களது முக்கிய கணினியில் நிறுவ வேண்டாம், காரணம் சோதனை அடிப்படையில் பயன்பாடு இருக்கும் போது பிழை இருக்கலாம்.

விண்டோஸ் 11 வெர்ஷன் அறிமுகம்

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விண்டோஸ் 11 வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். விண்டோஸ் 10 அறிமுகம் செய்யப்பட்ட ஆறு ஆண்டுகளுக்கு பிறகு புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் வெர்ஷனைஅறிமுகம் செய்துள்ளது இந்த மைக்ரோசாப்ட் நிறுவனம். இதன் ஸ்டார்ட் மெனுவில் லைவ் டைல்ஸ் இல்லாமல் உள்ளது. அதன்பின்பு டாஸ்க் பாரில் ஐகான்களை புதிய முறையில் பொசிஷன் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக புதுவிதமான அப்ளிகேஷன் ஸ்டோர், ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் சப்போர்ட் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த விண்டோஸ் 11.

விண்டோஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்

புதிய வெர்ஷன் இயங்குதளம் ஆனது கேமிங் பிரியர்களுக்காக ஆட்டோ எச்டிஆர் அம்சத்தையும் கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று நடைபெற்ற ஒரு மெய்நிகர் நிகழ்வில் இந்த புதிய விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விண்டோஸ் 10 இல் தற்போது சுமார் 1.3 பில்லியன் சாதனங்கள் உள்ளன என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி சத்யா நாதெல்லா இந்த புதிய வெர்ஷன் வெளியீட்டை விண்டோஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் என்று விவரித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக