Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 8 அக்டோபர், 2021

நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில் ஜியோ பயனர்களுக்கு அன்லிமிடெட் சலுகை.!

ஜியோவின் நெட்வொர்க் பிரச்சனை

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சலுகைகள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் நாட்டின் பல பகுதிகளில் இயங்காமல் போனது. குறிப்பாக ஜியோ பயனர்கள் கால் அழைப்புகள் மற்றும் இணைய சேவையில் இடையூறை சந்தித்தனர்.

குறிப்பாக ஜியோவின் நெட்வொர்க் பிரச்சனை மத்திய பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பரவலாக ஏறப்பட்டது என்று கூறப்படுகிறது. பின்பு இந்த நெட்வொர்க் பிரச்சனையை ஒருவழியாக ஜியோ நிறுவனம் சரி செய்துவிட்டதாக தெரிவித்தது. மேலும் நெட்வொர்க்கில் ஏற்பட்ட திடீர் கோளாறை ஈடுசெய்யும் வகையில்,ஜியோ சார்பில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இரண்டு
நாட்களுக்கு அன்லிமிடெட் சலுகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டு நாள் வரம்பற்ற சலுகை குறித்த விவரம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் தற்போதைய சலுகை நிறைவுற்றதும், இரண்டு நாட்களுக்கான வரம்பற்ற சலுகை வழங்கப்படும். எனவே 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை வாடிக்கையாளர்கள் 30 நாட்கள் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!