இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
ஏழு கண்டங்களையும், ஏழு
கடல்களையும் கொண்டதுதான் உலகம் என்பது
இப்போது நமக்குத் தெரிந்த உண்மை.
ஆனால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை
அந்த உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த உண்மைகளை கண்டு சொன்னவர்களுக்கு நன்றி சொல்ல
கடமைப்பட்டிருக்கிறது வரலாறு.
ஏனெனில் ஒரு
புதிய பொருளை கண்டுபிடிப்பதில் எவ்வுளவு சிரமமோ
அதைவிட சிரமமானது புதிய
கண்டங்களையும், புதிய
நாடுகளையும் கண்டுபிடிப்பது. அதனை துணிந்து செய்த ஒரு
சிலரில் முக்கியமானவர் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு கண்டு
கடைசியில் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கிறிஸ்டோபர் கொலம்பஸ்.
1451-ஆம்
ஆண்டு இத்தாலியில் ஜெனோவா(
Republic of Genoa) நகரில் பிறந்தார் கொலம்பஸ். நம்மில் சிறுவயதில் எத்தனையோ கனவுகள் இருக்கும் ஆனால் கொலம்பஸ் கண்ட கனவு
என்ன தெரியுமா? கடல்களை கடந்து புதிய
தேசங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு
தந்த உந்துதலின் பேரில்
பதினான்காவது வயதிலேயே மாலுமியானார் கொலம்பஸ். கடல்வழி மார்க்கம் என்பதே இல்லாத
அந்தக்கால கட்டத்தில் பண்டமாற்றும், வணிகமும் தரை வழியாகத்தான் நடந்தன. அப்போது ஆசியாவின் வர்த்தக மையமாக மலேசியா இருந்தது என்று
வரலாறு கூறுகிறது. இந்தியா, சீனா, இந்தோனோசியா மற்றும் மத்தியத் தரைக்கடல் நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் அங்கு கூடுவார்கள். தாங்கள் கொண்டு
வந்த பேரிச்சைம்பழம், கலை
நயமிக்க தரை
விரிப்புகள், அரேபிய
குதிரைகள் ஆகியவற்றைக் கொடுத்து விட்டு
அவற்றுக்கு ஈடாக
பருத்தி மற்றும் பட்டு ஆடைகள்,
மிளகு, கிராம்பு போன்ற
நறுமணப் பொருட்கள், பவளம் கோமிதகம் போன்ற விலையுயர்ந்த கற்கள் போன்றவற்றை வாங்கிக்கொள்வார்கள். அவற்றை
ஒட்டகங்களின் முதுகில் ஏற்றிக்கொண்டு தரைவழிமார்க்கமாக சீனா, ஐரோப்பாவை கடந்து இத்தாலியின் வெனிஸ் நகருக்கு கொண்டு வந்து
விற்பனை செய்வார்கள். ஐரோப்பியர்கள் தங்கம்
கொடுத்து அவற்றை
வாங்குவார்கள்.
ஐரோப்பாவில் குறிப்பாக மிளகு, கிராம்பு போன்ற நறுமணப் பொருள்களுக்கு அப்போது அதிக கிராக்கி இருக்கும். ஏனெனில் குளிர் காலங்களில் மாமிசங்களை பதப்படுத்தி வைப்பதற்கு அவை
உதவின. அந்த நறுமணப் பொருள்கள் அத்தியாவசிய தேவை என்று
உணர்ந்த ஐரோப்பியர்களுக்கு அவை இந்தியாவிலிருந்து வருகின்றன என்று
தெரியும். ஆனால்
இந்தியா எங்கிருக்கிறது என்பது தெரியாது. எவ்வுளவு காலம்தான் அரேபிய இடைத்தரகர்களுக்கு தங்கத்தை கொடுப்பது என்று எண்ணிய
அவர்கள் இந்தியாவிற்கு கடல்வழி மார்க்கம் கண்டுபிடித்தால் அந்தப்
பொருள்களை நேரடியாகப் பெற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தனர். அப்படி நினைத்தவர்களில் ஒருவர்தான் கொலம்பஸ். 1476-ஆம் ஆண்டு
கொலம்பஸ் கடல்
வழியாக ஐஸ்லாந்திற்கும், இங்கிலாந்திற்கும் சென்றார். ஆனால்
ஆசியாவுக்கு கடல்வழி மார்க்கத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் அவரது தனியாத
ஆர்வமாக இருந்தது.
தனது முயற்சிக்கு உதவுமாறு அவர் இங்கிலாந்து மற்றும் போர்ச்சுக்கல் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டார் ஆனால் அது வீண்முயற்சி என்று நினைத்ததாலோ என்னவோ அந்த
இரு அரசாங்களும் உதவ
மறுத்தன. இறுதியில் அவருக்கு கைகொடுத்தவர் ஸ்பெயின் தேசத்தின் ராணி இசபெல்லா. கொலம்பஸுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததோடு அவர்
கண்டுபிடிக்கும் அனைத்து புதிய நிலங்களுக்கும் அவரையே ஆளுநராக நியமிப்பதாகவும் உறுதி
கூறினார் ராணி
இசபெல்லா. அதுமட்டுமல்ல புதிய தேசங்களிலிருந்து கொலம்பஸ் கொண்டு
வரும் சொத்துகளில் பத்தில் ஒரு பங்கை
அவருக்கே கொடுப்பதாகவும் உறுதியளித்து அனுப்பி வைத்தார்.
1492-ஆம்
ஆண்டு ஆகஸ்ட் மாதம்
3-ஆம் நாள் தமது
41-ஆவது வயதில் தனது
கனவை நோக்கி புறப்பட்டார் கொலம்பஸ். சாண்டா
மரியா, நின்யா, பின்டா
ஆகிய மூன்று கப்பல்களில் நூறு ஊழியர்கள் அவருடன் பயணித்தனர். சுமார் இரண்டு
மாதங்கள் நிலப்பரப்பையே காணாமல் கடலில்
அலைந்த கொலம்பஸுக்கு அக்டோபர் 12-ஆம் நாள்
நிலம் கண்ணில் பட்டது.
இந்தியாவையே கனவு
கண்டு கொண்டிருந்ததால் தாம்
இந்தியாவை அடைந்து விட்டதாக எண்ணி
புளங்காகிதம் அடைந்தார் கொலம்பஸ். ஆனால்
அவர்கள் நங்கூரமிட்டது இந்தியா அல்ல
வடஅமெரிக்காவின் 'பகாமஸ்
தீவு' என்பது அவருக்கு அப்போதும் மட்டுமல்ல இறந்தபோதும் தெரியாது என்பதுதான் விசித்திரமான உண்மை. அதன்பிறகு அவர் மேலும்
சில கடல் பயணம்
மேற்கொண்டு கெனேரித் தீவுகள் பனாமா
போன்ற நாடுகளையும், பல
சிறிய தீவுகளையும் கண்டுபிடித்தார்.
அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி பயணங்களால்தான் ஐரோப்பாவுக்கும், வடஅமெரிக்காவுக்கும் இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு வழி பிறந்தது. பல தேசங்களைக் கண்டுபிடித்த களிப்பிலும், களைப்பிலும் ஸ்பெயின் திரும்பிய கொலம்பஸ் 1506-ஆம் ஆண்டு
மே மாதம் 20-ஆம்
நாள் தனது 55-ஆவது
வயதில் காலமானார். தனது
கடைசி மூச்சுவரை இந்தியாவைக் கண்டுபிடித்து விட்டதாகவே நம்பியிருந்தார் கொலம்பஸ். ஐரோப்பியர்கள் இந்தியாவைத் தேடி புறப்பட்டதால்தான் உலகின் ஆழ
அகலத்தை மனுகுலம் உணர முடிந்தது. கியூபா, பகாமஸ்,
மேற்க்கிந்திய தீவுகள், சிலி, பிலிப்பின்ஸ், பசுபிக் பெருங்கடல் என்று பல
புதிய நாடுகளையும், சமுத்திரங்களையும், கடல்வழித் தளங்களையும் கண்டுபிடித்தனர்.
பூமியின் பல
பிரதேசங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர
உதவிய இந்தியா கடைசியாக 1498-ஆம் ஆண்டு
வாஸ்கோடகாமாவால் கண்டுபிடிக்கப்பட்டது. கொலம்பஸ் மூலம்
நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் கனவு
காண தயங்ககூடாது என்பதுதான். உலக வரலாற்றின் எந்த பக்கத்தைப் புரட்டினாலும் ஓர்
உண்மை மட்டும் மாறாதிருக்கும். அந்தப் பக்கங்களை அலங்கரிப்பவர்கள் அனைவருமே ஏதோ ஒரு
வகையில் கனவு
கண்டவர்கள் என்பதுதான் அந்த உண்மை.
கனவு காணத் துணிந்தவர்களால்தான் சாதித்தும் காட்ட
முடிகிறது. உங்கள்
கனவு உங்கள் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.
கொலம்பஸ் இந்தியாவைக் கண்டுபிடிக்க கனவு
கண்டபோது எத்தனை
பேர் அதனை பகல்கனவு என்று எள்ளி
நகையாடியிருப்பார்கள். உங்கள்
கனவுகளையும் பகல்கனவு என்று சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அது இயற்கையின் நியதி உங்களால் மாற்ற முடியாது. ஆனால் கனவு
காண்பதோடு அதனை
நனவாக்கும் நடவடிக்கைகளில் நீங்கள் தொய்வில்லாமல் தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டால் கொலம்பஸுக்கு அமெரிக்கா வசப்பட்டதைப்போல உங்களுக்கு உங்கள்
கனவும் அதன் மூலம்
நீங்கள் விரும்பும் வானமும் வசப்படும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக