Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 18 மே, 2019

மதுரை ஸ்பெஷல் நாட்டுக் கோழி பிரியாணி!


 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்


தேவையானவை:
நாட்டுக் கோழி
 இறைச்சி – அரை கிலோ
சீரகச்சம்பா அரிசி – இரண்டரை கப்
சின்ன வெங்காயம் – ஒரு கப்
நாட்டுத்தக்காளி (பெரியது) – 3
பச்சை மிளகாய் – 10
இஞ்சி-பூண்டு விழுது – 5 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் – 3 கப்
தயிர் – அரை கப்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்.
தாளிக்க:
பட்டை – 2
லவங்கம் – 2
ஏலக்காய் – 4
பிரிஞ்சி இலை – 1
அன்னாசிப்பூ – 1
கடல்பாசி – 1
லவங்க மொட்டு – 1
சோம்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – அரை கப்
நெய் – கால் கப்
கறிவேப்பிலை – 5 இலை
மல்லித்தழை
புதினா – தலா ஒரு கைப்பிடி
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
கோழியைக் கழுவி சுத்தம் செய்துகொள்ளுங்கள். சீரகச்சம்பா அரிசியைக் கழுவி ஊறவையுங்கள். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளநீளமாக நறுக்கிக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய், நெய் விட்டு, நன்கு காய்ந்ததும் தாளிக்கிற சாமான்கள் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு தாளியுங்கள். அவை ‘படபட’வென பொரியவேண்டும். பிரியாணி யின் மணமே, இந்த தாளிக்கும் பொருட்கள் நன்கு பொரிவதில்தான் இருக்கிறது.
பிறகு, வெங்காயம், பச்சை மிளகாயைப் போட்டு வதக்குங்கள். நன்கு வதங்கிய பிறகு, தக்காளி, மஞ்சள்தூள், புதினா, கறிவேப்பிலை, மல்லித்தழை, கோழி துண்டுகள், இஞ்சி-பூண்டு விழுது எல்லாவற்றையும் போட்டு, நன்கு வதக்குங்கள். எல்லாம் சேர்ந்து பச்சை வாசனை போக நன்கு வதங்கியதும், தயிர், உப்பு போட்டு, அதிலேயே கோழியை நன்கு வேகவிடுங்கள். நன்கு வெந்தபின், தேங்காய்ப்பால் சேருங்கள். தேங்காய்ப்பால் மட்டும் போதுமானது, தண்ணீர் சேர்க்கக் கூடாது.
பால் கொதிக்கும்போது, கழுவி வைத்திருக்கும் அரிசி யைச் சேர்த்து, அது வெந்து தண்ணீர் வற்றி மேலே வரும் போது, தட்டால் மூடி 5 நிமிடம் ‘தம்’ போடுங்கள். வாசம் மூக்கைத் துளைக்கும்
 என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக