>>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 21 மே, 2019

    ஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி!தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் ?


    தொடர் வண்டித் தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் தெரியுமா?
    Image result for ஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி!தண்டவாளங்களை ஏன் கருங்கல் ஜல்லிகளின் மேல் பதித்திருக்கிறார்கள் ?  

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்

     வேகமாகச் செல்லும் தொடர் வண்டிகளின் அதிர்வைச் சமாளிக்கும் விதத்தில் ஜல்லி பரப்பப்பட்டுள்ளது. ரயில் வண்டிகளுக்கு மெத்தை போன்று அமைந்துள்ளது.மாறாக, கெட்டியான தளத்தில் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டால், வண்டிகளின் வேகத்தால், அதிர்வுகளினால், விரிசல் ஏற்பட்டு தளம் உடைந்து போவதோடு அருகில் இருக்கும் கட்டடங்களும் சேதமடையும் அபாயம் உண்டு. ஜல்லி அதிர்வைத் தாங்குவதோடு, மழை நீரையும் வடித்துவிடுகிறது. கெட்டித்தளமாக இருந்தால் நீர் தேங்கி நிற்கும்.
     
    நம் நாட்டில் தொடர் வண்டிப் பாதை அமைக்கப்பட்டு தொடர் வண்டி (அந்தக் காலத்தில் புகைவண்டி) ஓடத் தொடங்கியது. 1853-ஆம் ஆண்டில்தான்.

    புனே முதல் மும்பையின் தானே வரைதான் முதன் முதலில் வண்டி ஓடத் தொடங்கியது.

    அதன்பின் தொடர்வண்டி ஓடியது தமிழ் நாட்டில்தான். வேலூர் மாவட்டம் வாலாஜா முதல் ராயபுரம் வரை ஓடியது.

    சென்னையின் வடபகுதியில் இருக்கும் ராயபுரம்தான். 100 மைல் தூரம் உள்ள இந்த ரயில் பாதையில் ஓடிக் கொண்டிருந்த தொடர் வண்டி ராயபுரம் நிலையத்தில் நின்று திரும்பியது.

    1900-களில் ராயபுரம் பெரிய தொடர் வண்டி நிலையம் (படம்)அப்போதெல்லாம் சென்ட்ரலும் கிடையாது. எழும்பூரும் இல்லை. ராயபுரம் நிலையம் 1907-இல் பெரிய நிலையமாக வளர்ந்த பிறகு கட்டப்பட்டது. சென்ட்ரல் நிலையம். பெயருக்கு ஏற்றாற்போல நகரின் மய்யத்தில் அமைந்தது இருக்கும் நிலையம்.

    அதன் பிறகு 1908-இல் கடைசியாகக் கட்டப்பட்டதுதான் எழும்பூர் ரயில் நிலையம். இது இருக்குமிடம் ஒரு காலத்தில் கோட்டையாக இருந்தது. வெடி மருந்துப் பொருள்கள் இங்கு சேமித்து வைக்கப் பட்டிருந்தன. அதன் பெயர் எழும்பூர் ரெடோ.

    மழைநீர் துல்லியமாக வடிந்து குழாய்கள் வழியே வழிந்து ஒரு குளத்தில் சேமிக்கப்படும் வகையில் அந்தக் காலத்தில் வடிவமைத்துக் கட்டப்பட்ட நிலையம். அதிலுள்ள படிக்கட்டு மேம்பாலத்தின் வயது 100 ஆண்டுகள்.

    அகலப் பாதைத் தொடர்வண்டிகள் ஓடிக் கொண்டிருக்கும் சில நாடுகளில் இந்தியா ஒன்று. மற்றைய நாடுகளில் இருப்புப் பாதையின் அகலம் 4 அடி எட்டரை அங்குலம் ஆகும்.

    நம் நாட்டின் பெருத்த மக்கள் தொகையை மனதில் கொண்டு பிரிட்டிஷ்காரர்கள் வடிவமைத்த பாதை ஆறு அடி அகலம் கொண்ட அகல இருப்புப்பாதை. 150 ஆண்டுகளுக்கு முன்பே தொலைநோக்குடன் சிந்தித்துச் செயல்பட்டுள்ளனர் ஆங்கிலேயர்கள்.

    ஆறு அடி என்பது மிகவும் அகலமாக இருக்கும் என்ற கருத்து எழுந்து, அதன் பின்னர் அது அய்ந்தரை அடியாக்கப்பட்டது.அதிக நீளம் உள்ள இருப்புப் பாதைகள் இந்தியாவில் உள்ளன. லட்சக்கணக்கான பணியாளர்களும் கோடிக்கணக்கில் பயணிகளும் பயணம் செய்கின்றனர்.
     என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக