இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம்
தற்கொலை செய்ய முயலும் இந்தக் காலத்தில், அப்படிப் பட்டவர்களை எவ்வாறு
காப்பாற்றுவது என்பதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
முதலில் தூக்குப்போட்டுத் தற்கொலைக்கு
முயற்சிப்பவர்களுக்கு முதலுதவி: தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கும்
ஒரு நபர் அதிர்ஷ்டவசமாக நம்மால் கவனிக்கப்பட்டால் அதிலும் நாம் அவர்களை நான்கு
நிமிடங்களுக்கு உள்ளாக, காப்பாற்றி சிகிச்சை அளித்தால் நிச்சயம் காப்பாற்றி
விடலாம். இதற்கான சில முதலுதவிகள் வருமாறு:-
முதலில், தூக்கு மாட்டியவரைத் தாங்கிப்பிடித்து
மேலே தூக்க வேண்டும். இதனால், தூக்குக் கயிறானது தளர்ந்து அவரது கழுத்தை
இறுக்காது. உடனடியாக மற்றொருவர் மேலே ஏறித் தூக்குக் கழுத்தில் இருந்து தூக்குக்
கயிற்றை அகற்ற வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட நபரின் கழுத்துப் பகுதியானது எந்த
ஒரு பக்கத்திலும் சாய்ந்து விடாதவாறு பிடித்துக்கொண்டே கீழே இறக்க வேண்டும். கயிறு
இறுக்கியதில் கழுத்தில் உள்ள எலும்பு உடைந்து சிறுமூளையில் குத்துவதால் தான் உடனடி
உயிரிழப்பு ஏற்படுகிறது. இதைத் தடுப்பதற்காகவே இப்படிச் செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட நபரை படுக்க வைத்த நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல
வேண்டும்.
ஒருவேளை தூக்கில் தொங்கிய நபர் நினைவு
இழந்த நிலையில், நாடித்துடிப்பு இல்லாமல் இருந்தால், அவரது முகத்தில் தண்ணீர்
தெளிப்பதோ, தண்ணீர் குடிக்கக் கொடுப்பதோ கூடாது. வேண்டும் என்றால் வாயோடு வாய்
வைத்துக் காற்றை ஊதுவது, மார்பில் அழுத்துவது போன்ற 'சிஆர்பி’ வகை முதல் உதவிகளை
மேற்கொள்ளலாம்.
மணிக்கட்டுப் பகுதியில் ரத்தக் குழாயைத்
துண்டித்துக் கொண்டால் செய்ய வேண்டிய சில முதலுதவிகள்:-
கை மணிக்கட்டு ரத்தக் குழாயைத்
துண்டித்திருப்பவரைக் கண்டால், உடனடியாகக் கயிறு அல்லது துணியினால் மணிக்கட்டுப்
பகுதியில் அழுத்தமான கட்டுப் போட்டு கையை மேலே தூக்கி நிறுத்திய நிலையிலேயே
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக