இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
பாலத்தில் செல்வதில் நம்மில் பலருக்கு ஆர்வம் இருந்தாலும் கூட மிகவும் பயமான விஷயமாக கருதுவோம். பாலத்தில் நின்று கீழே பார்த்தால் தலையே சுற்றிவிடும். அந்த அளவிற்கு உயரமாகவும், பயமாகவும் இருக்கும். அந்த வகையில் புதுமைக்கு பெயர் பெற்ற சீனாவில் உள்ள திகிலூட்டும் அனுபவத்தை தரும் கண்ணாடி பாலத்தை பற்றி காண்போம்.
மலைக்குன்றுகளுக்கு இடையே கண்ணாடி பாலங்களை அமைத்து சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் திகிலூட்டும் அனுபவத்தை அளித்து கொண்டிருக்கிறது சீனா.
சிறப்புகள் :
உலகிலேயே மிக நீளமான, உயரமான கண்ணாடி நடைபாதை பாலம் சீனாவின் ஹுனான்(ர்ரயெn) மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ (ணூயபெதயைதநை) மலைப் பகுதியில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி அன்று திறக்கப்பட்டது. இதனை வடிவமைத்தவர் ஹாய்ம் டோடன் (ர்யiஅ னுழவயn) எனும் பொறியாளர்.
தரைமட்டத்தில் இருந்து 300 மீட்டர் உயரத்திலும், இரு மலைக்கு இடையே 430 மீட்டர் நீளத்திலும் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், அதில் நடந்து செல்லும் பார்வையாளர்களுக்கு திகிலான அனுபவத்தை தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
நடைபாதையில் கண்ணாடி பதிக்கப்பட்டிருப்பதால் எங்கே உடைந்து விடுமோ என்ற அச்சத்தையும் ஏற்படுத்தும். அதே சமயம் பள்ளத்தாக்கில் நிரம்பியிருக்கும் இயற்கை காட்சிகளையும் வெகுவாக ரசிக்க முடியும். வடிவமைப்பு, கட்டமைப்பு என 10 உலகச் சாதனைகளை படைத்தது இந்த நடைபாதை பாலம்.
பார்வையாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மூன்றடுக்கில் மிக உறுதியாக இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 6 மீட்டர் அகலம் கொண்டதாக விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் ஒரு பெரிய கார் பயணம் செய்யும் அளவிற்கு உறுதியானது.
இரு மலை உச்சிகளுக்கு இடையே கட்டப்பட்ட இந்த பாலத்தின் தரைப்பகுதி முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி பாலத்தின் மேல் நாம் நடக்கும்போது எங்கு கால் வைக்கிறோம் என புரியாத வகையிலும், சாகசமாகவும் இருக்கும். பாலம் முழுவதும் கண்ணாடி பதிக்கப்பட்டுள்ளதால் நடந்து செல்லும்போது இயற்கை காட்சிகளையும் கண்டு ரசிக்க முடியும்.
இரும்பு கம்பிகள் திரிக்கப்பட்ட வலிமையான வடங்களில் தொங்குவது போல் இந்த பாலம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
இரு மலை முகடுகளிலும் அமைக்கப்பட்ட இரண்டு இரும்பு கோபுரங்கள்தான் இந்த தொங்கு பாலத்தை இரும்பு வடங்கள் மூலமாக தாங்கி நிற்கிறது.
இதில் நடப்பது என்பது வானத்தில் நடப்பது போல் அனுபவத்தைத் தரும். வித்தியாசமான புகைப்படம் எடுப்பதற்கான, குறிப்பாக திருமண புகைப்படங்கள் எடுப்பதற்கான வாய்ப்புகளை இந்த பாலம் வழங்குகின்றன.
ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிந்தபடி பாலத்தில் நடப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாலத்தின் மீது, ஒரே நேரத்தில் 800 பேர் மட்டுமே செல்ல அனுமதி அளித்திருந்தனர். இந்த கண்ணாடி பாலம் பலத்த காற்று, பூகம்பம், பனி மற்றும் 800 பார்வையாளர்களின் எடையை தாங்கும் சக்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்ணாடி மிகவும் தடிமனாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதனால் சுற்றுலாப்பயணிகளை இப்பாலம் அதிகம் ஈர்க்கிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக