இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்
வரலாற்றில் மிக அதிகமான மரண
தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம் என இங்கிலாந்தின் லண்டன்
டவர் கருதப்படுகிறது. இதன் வரலாறு ரோம பேரரசர் கிளாடியஸ் காலத்தில் தொடங்குகிறது.
தனது ராஜ்ஜியத்துக்காக இந்த இடத்தை தேர்வு செய்த கிளாடியஸ், அங்கு புதிதாக
பிரமாண்ட கோட்டையை கட்டினார்.
ஆயிரம் ஆண்டுகள் கழித்து வில்லியம் அரசர் அதே இடத்தில் புகழ் பெற்ற லண்டன் டவரை கட்டினார். ஐரோப்பாவில் உள்ளகட்டிடங்களில் மிகவும் பழமையானது என கருதப்படுகிறது இந்தக் கோட்டை. இங்கு கோபுரம், அரண்மனை, கோட்டை மற்றும் சிறைச்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிரச்சேதம் (தலை துண்டிக்கப்பட்டு கொல்லுதல்) செய்யப்பட்டனர்.
சுமார் 400 ஆண்டுகளில் பிரபுக்கள், அரச குடும்பத்தார் உள்பட ஏராளமானோருக்கு இங்குதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலைக்களமான இந்தக் கோட்டையை பார்வையிட செல்பவர்கள், இப்போதும் மரண பீதியிலேயே செல்கின்றனர். நான் ரொம்ப தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்பவர்கள்கூட, இருட்டத் தொடங்கிவிட்டால் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க தயங்குகிறார்கள். காரணம், கொடூரமான முறையில் சிரச்சேதம் செய்யப்பட்ட பலர் இப்போதும் கோட்டையில் ஆவியாக சுற்றுவதாக கூறப்படுகிறது.
இங்கு முதன்முதலில் ஆவியாக தென்பட்டவர் ஆவியாக தென்பட்டவர் தாமஸ் என்ற கைதி. கோட்டையை சீரமைக்கும் பணி நடந்தபோது தொழிலாளர்கள் ஒரு குறுக்குச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவேசமாக அங்கு வந்த தாமஸின் ஆவி, தொழிலாளர்களை மிரட்டி கட்டுமான பணிகளை தடுத்ததாம். ஆவி புகுந்ததால் சுவரில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர்.
கையில் ஆண் குழந்தையுடன் சோகமே உருவாக வலம் வரும் ராணி ஆனியின் ஆவியை பார்த்ததாக சுற்றுலா பயணிகள் பலர் கூறினர். ஆனியின் மகனான அந்தக் குழந்தை அரசு குடும்பத்து வாரிசு என கூறப்படுகிறது. குழந்தை இறந்ததை அடுத்து ஆனி மீது ராஜதுரோகம் மற்றும் நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிரச்சேதம் செய்யப்பட்ட அவளது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கொல்லப்பட்டபோது அணிந்திருந்த அதே ஆடையுடன் ஆனியின் ஆவி லண்டன் டவரின் உயரமான பகுதிகளில் இப்போதும் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.
70 வயதான செல்ஸ்பெரி என்ற பெண்ணுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைதான் இங்கு நடந்த கொடூரமான செயல் என்கின்றனர் சிலர். அரசியல் காரணங்களுக்காக செல்ஸ்பெரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற முயலும்போது அவள் தனது தலையை பலி பீடத்தில் வைக்க மறுத்து தப்பி ஓடியதாகவும், விடாமல் துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. சாகும் வரை அவரை செதில்செதிலாக வெட்டினார்களாம். துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட செல்ஸ்பெரி, இப்போது இங்கு ஆவியாக அலைகிறார் என மக்கள் நம்புகின்றனர்.
இங்கு திரியும் ஆவிகள் மிகவும் அச்சமூட்டுவதாகவும் பயங்கரமானவை என்றும் லண்டன்வாசிகள் கூறுகின்றனர். விதவிதமான ஆடை அலங்காரத்துடனும், தேவதைகள் போலவும் ஆவிகள் உலவுகின்றனவாம்.
சில ஆவிகள் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டும் நிலையில் சோகமே உருவாய் அவை அலைவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்குள் நாய்கள் நுழைவதேயில்லை. கோட்டை காவலாளிகள்கூட இருட்டத் தொடங்கியதும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். அசட்டு தைரியத்துடன் சென்ற சில இளைஞர்கள்கூட, சில நிமிடங்களில் பேயறைந்தவர்களைப் போல திரும்பிவிட்டனர். தங்களை ஏதோ ஒரு சக்தி இழுப்பதுபோல் உணர்ந்ததாகவும், அதனால் அலறி அடித்து திரும்பி வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆவிகள் அலையும் கோட்டையை பற்றி பல திகில் கதைகள் கூறப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் இடமாகவே இது உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக