இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
மூலவர் : தயாநிதீஸ்வரர்.
தல விருட்சம் : தென்னை மரம் உள்ளது.
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : வடகுரங்காடுதுறை.
மாவட்டம் : தஞ்சாவூர்.
தல வரலாறு :
வாலிக்கு வால் வளர அருள்செய்த இடமே குரங்காடுதுறையாகும். வாலிக்கு வால் அறுந்துபோனது. வாலியைக்கண்டு ராவணனே நடுங்கியிருக்கிறான். அவனை வாலால் அடிக்கும்போது ஒரு வேளை வால் அறுபட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தனது வால் வளர அவன் சிவபெருமானை வணங்கினான்.
குரங்காடுதுறை தலத்திற்கு வந்து சிவபெருமானை வணங்கியதால் வாலிக்கு வால் மீண்டும் வளர்ந்தது. அத்தகைய செயல் நடைபெற்றமையால் சிவபெருமான் தயாநிதீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அம்பாள் ஜடாமகுட நாயகி. இத்தலத்தில் சிவபெருமான், சிட்டுக்குருவி ஒன்றிற்கும் மோட்சம் அளித்துள்ளார். எனவே இவர் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தயாநிதி என்ற பெயருக்கு ஏற்ப கருணை மழை பொழிந்துள்ளார்.
ஒரு சமயம் செட்டிப்பெண் எனப்படும் கர்ப்பிணி பெண் ஒருத்தி தாகம் தாளாமல் இக்கோவில் வழியே நடந்து வந்து கொண்டிருந்தாள். அப்பகுதியை சுற்றிலும் எங்கும் தண்ணீர் இல்லை. அவள் தாகத்தால் இறந்துவிடுவாளோ என்ற நிலைமை ஏற்பட்டது.
அவள் தன் உயிர் போகும் தருணத்தில் அங்கிருந்த சிவலிங்கத்தை நோக்கி வணங்கினாள். சிவபெருமானே அங்கு தோன்றி அருகிலிருந்த தென்னைமரத்தை வளைத்து இளநீரை பறித்துக்கொடுத்தார். அந்தப்பெண் தாகம் நீங்கினாள். ஆகையால் இறைவனுக்கு குலைவணங்கிநாதர் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.
தல பெருமை :
இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 49 வது தேவாரத்தலம் என்பது இதன் சிறப்பம்சமாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
இத்தலக் கோவிலில் உள்ள தெட்சிணாமூர்த்தியை தரிசித்தால் குருபலம் பெருகுகிறது. நேர்த்திக்கடனாக அம்பாளுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நிறைவேற்றலாம்.
திருவிழா :
பங்குனி உத்திர திருவிழா, நவராத்திரி பத்து நாள் விழா ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. கார்த்திகையில் அம்பிகையை பெண்கள் 1008 முறை சுற்றி வருவது விசேஷ அம்சமாகும்.
திறக்கும் நேரம் :
காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோவில்,
வடகுரங்காடுதுறை - 614 202.
தஞ்சாவூர் மாவட்டம்.
போன் : 91 4374 240 491, 244 191.
செல்லும் வழி :
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் இந்த தலம் 20வது கி.மீ. தொலைவில் அருள்மிகு தயாநிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக