இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter:
www.twitter.com/Pudhiyapodiyan
குழந்தைகள் விளையாட்டு என்றாலே குஷியாகி விடுவார்கள். எனக்கு விளையாட்டு பிடிக்காது என்று எந்த குழந்தைகளும் கூற மாட்டார்கள்.
குழந்தைகள் விளையாடும் விளையாட்டுக்களின் மூலம் உடலும், மனமும் உற்சாகம் பெறும். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் படிப்பு, இட நெருக்கடி, வீடியோ கேம் போன்ற பல காரணங்களால் குழந்தைகள் கிராமத்து விளையாட்டுகளை மறந்து போய்விட்டனர்.
அவர்களுக்கு கிராமத்து விளையாட்டுகளை சொல்லி கொடுத்து உற்சாகப்படுத்துவோம்... இன்று நாம் பார்க்க இருக்கும் விளையாட்டு செவன் அப்.
எத்தனை பேர் விளையாடலாம்?
8க்கும் மேற்பட்ட குழந்தைகள் விளையாடலாம்.
எப்படி விளையாடுவது?
முதலில் சற்று இடைவெளி விட்டு வட்டமாக அமர்ந்து கொள்ள வேண்டும். பின்பு யாராவது ஒருவர் 1 என்று சொல்லி வலது கையால் இடது கையின் மீதோ அல்லது இடது கையால் வலது கையின் மீதோ லேசாகத் தட்டியபடி விளையாட்டைத் தொடங்க வேண்டும்.
இப்படி தட்டும்போது, தட்டுபவருக்கு அருகில் இருபுறமும் அமர்ந்திருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இடப்புறம் தட்டினால் இடது பக்கத்தில் இருப்பவர், வலப்புறம் தட்டினால் வலது பக்கத்தில் இருப்பவர் விளையாட்டைத் தொடங்க வேண்டும்.
அடுத்து விளையாட்டை தொடர்பவர் அதேபோல், 2 என்று சொல்லிவிட்டு, அவர் விருப்பம்போல் ஏதாவது ஒரு கையால் மற்றொரு கையில் தட்ட வேண்டும். அவர் எந்தப் பக்கம் தட்டினாரோ அந்தப் பக்கத்தில் இருப்பவர் 3 என்று சொல்லி, அவர் விருப்பம்போல எந்தப் பக்கமாவது கையைத் தட்ட வேண்டும்.
இவ்வாறாக அடுத்தவர் 4 என்று கையைத் தட்ட, அதற்குப் பக்கத்திலிருப்பவர் 5 என்று கையைத் தட்ட, அதற்கு அடுத்தவர் 6 என்று சொல்லி கையை தட்ட வேண்டும்.
6 என்று சொல்லி கையைத் தட்டியவர் எந்தப் பக்கம் தட்டினாரோ, அந்தப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் உடனே, கையை எடுத்து தலை மேல் வைத்து செவன் அப் என்று சொல்ல வேண்டும்.
வலது கையை தலையில் வைத்து இடதுபக்கம் காட்டியப்படி சொன்னால் இடதுபக்கம் அமர்ந்திருப்பவர் அல்லது இடது கையை தலையில் வைத்து வலதுபக்கம் காட்டிச் சொன்னால் வலதுபக்கம் அமர்ந்திருப்பவர் 1 என்று சொல்லி விளையாட்டை மீண்டும் தொடர்ந்து ஆடலாம்.
அடுத்தடுத்து வேகமாகச் சொல்லியபடி விளையாடும் இந்த விளையாட்டில், யாராவது அவசரப்பட்டு இடதுபக்கம் இருப்பவரை சொல்வதற்கு பதிலாக வலதுபக்கம் இருப்பவரை சொல்லிவிட்டால் அவுட் ஆவார்.
6 என்று அருகில் இருப்பவர் சொல்லிய பிறகு, செவன் அப் என்று தலையில் கை வைக்காமல் சொன்னால் அவரும் அவுட் ஆவார்.
இப்படி விளையாடும் விளையாட்டில் ஒவ்வொருவராகப் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள, கடைசிவரை தொடர்ந்து விளையாடி வரும் இருவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்கள் ஆவார்கள்.
பயன்கள் :
- எச்சரிக்கை உணர்வு மேலோங்கும்.
- புத்துணர்ச்சி பெருகும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- கைகள் வலுப்பெறும்.
- புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன
மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன்
உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ,
குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால் குழுவிற்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள்,
நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள்,
வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும்
சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன்
வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக