Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 4 ஜூன், 2019

சிதம்பர ரகசியம் என்ன?


Image result for சிதம்பர ரகசியம் என்ன?



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..


Follow Us:

  நவீன விஞ்ஞான நுட்பங்கள் கூட போட்டிபோட முடியாத சிறப்புகளை நம் முன்னோர்கள் தங்கள் அறிவால் உருவாக்கியிருப்பதற்கான சாட்சியே தில்லை நடராஜர் கோவில். சிதம்பர ரகசியம் எல்லோரும் அறியத்துடிக்கும் ஒன்றாகும். அப்படி என்ன ரகசியம் இருக்கு சிதம்பர நடராஜர் கோவிலில்....

சிதம்பரத்தில் இறைவன் உருவமாகவும், அரூபமாகவும், அரூவுருவமாகவும் அருள்பாலிக்கிறார். உருவம் நடராஜர், அரூவுருவம் ஸ்படிக லிங்கம், அரூபம் சிதம்பர ரகசியம். புராணங்கள் சிதம்பர ரகசியத்தை தஹ்ரம் என்று குறிப்பிடுகின்றன.

இந்த ரகசிய ஸ்தானம் சிற்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாசல். இதில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும்.

இது எப்பொழுதும் திரஸ்க்ரிணீ என்கிற நீல வஸ்திரத்தால் மூடப்பட்டு இருக்கும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தள மாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும்.

 மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் (அருபமாக) இருக்கிறார் என்பதுதான்.

இந்த ரகசிய ஸ்தானத்தை எந்தப் பலனைக் குறித்தும் ஒருவன் தரிசித்தால், நினைத்தபடி அந்தப் பலன் கிடைக்கும். எந்தப் பலனையும் சிந்திக்காமல் தரிசித்தால் ஜென்ம விமோசனம் சித்திக்கும் என்கிறார்கள்.

எளிதில் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், திரை ரகசியம். திரை விலகினால் ஒளி தெரியும். அதேபோல், நம் மனதில் உள்ள மாயை விலகினால் தெளிவு பிறக்கும் என்பதாகும்.

சிதம்பர ரகசியம் : சித் அம்பரம் ஸ்ரீ சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி.

அகன்ற பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை உருவில் வழிபடுவதைவிட, வெட்ட வெளியை (அருவத்தையே) இறைவனாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும்.

சிதம்பர ரகசிய ஸ்தானத்தில் ஸ்ரீசக்கரத்தையும், சிவசக்கரத்தையும் இணைத்து, ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த சக்கரத்தில் நடராஜப்பெருமான் இருந்து, தன் ஆனந்த நடனத்தினால் உலகை படைத்து, காத்து, அழித்து அருளிக்கொண்டிருக்கிறார்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக