Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூலை, 2019

உணவு விரும்பிகளின் சொர்க்கபுரியாக இருக்கும் இட்லிஸ் உணவகம்..அப்படி என்ன இருக்கு..?

 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


உணவு என்பது பசிக்கு மட்டுமல்ல, வகை வகையான ருசிக்கும் தான் எனபது உணவு விரும்பிகளின் கருத்து. அப்படி, விதவிதமான ருசிகளை தேடிச் சென்று உண்ணும் உணவு விரும்பிகளின், சொர்க்கபுரியாக இருப்பது தான் சென்னை அஷோக் நகரில் செயல்பட்டு வரும் இட்லிஸ் உணவகம் குறித்த செய்தி தொகுப்பு ..

தயிர் பொடி இட்லி, மிளகாய் பொடி இட்லி, கறிவேப்பிலை பொடி இட்லி, எள்ளு பொடி இட்லி என வகை வகையான இட்லிகளின் வரிசை நீள்கிறது இட்லிஸ் உணவகத்தின் மெனு அட்டை. 
சென்னை அஷோக்  நகரில் உள்ள இட்லிஸ் உணவகத்தில் தான் இத்தனை வகையான மணமணக்கும் இட்லிகள் கிடைக்கின்றன. சென்னைவாசிகளின் தவிர்க்க முடியாத உணவாகவும், தமிழகத்தின் பாரம்பரிய உணவாகவும் உள்ள இட்லி, பெரும்பாலும் நம் காலை உணவில் தவறாமல் இடம்பிடிப்பதாகும். 

இதனாலோ என்னவோ,  இட்லியைக் கண்டதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தினமும் சாப்பிட்டு போர் அடித்த உணவாகவே  கருதுகின்றனர். இப்படி உண்டு சலித்து, இட்லியை வெறுப்பவர்களையும் வியக்க வைத்துள்ளது இந்த இல்லி கடை.


இட்லி என்றாலே வேண்டாம் என சலிப்பாக ஒதுக்குபவர்கள் விரும்பி உண்ணும் உணவின் பட்டியலில், இந்த விதவிதமான இட்லி இடம் பெறும் அளவுக்கு வித்தியாசமாக வழங்குகின்றனர் "இட்லிஸ்" உணவகத்தினர்.  உணவகத்தினர் பெயருக்கு ஏற்றார் போல் இட்லியில் பல வகைகளை செய்து அசத்துகின்றனர், உணவகத்தை தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், தொன்மையான  உணவு வகைகளை, புதுமையான முறைகளில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இட்லி மட்டுமில்லாமல் வெள்ள தோசை, உப்மா கொழுகட்டை , செப்பங்கழங்கு வறுவல், மோர் கலி, கீரைவடை, வெண்பொங்கல், அரிசி உப்மா, மட்கா தயிர்சாதம், பானகம், மோர் என பல்வேறு வகையான உணவு வகைகளை காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகிறார்கள்.
இட்லியில் மட்டும் இவர்கள் வித்தியாசம் காட்டவில்லை, அதற்கு சைடிஷ்ஷாக வைக்கும் மோர் குழம்பு, தக்காளி குழம்பு, பூண்டு குழம்பு என உண்போரின் நாவுக்கு புது சுவையும், புது அனுபவத்தை தருகிறார்கள். 

வீட்டு பக்குவத்தோடு செய்யப்படும் இவ்வகை இட்லிகளை தேடி வந்து சாப்பிடுவோர் ஒரு புறம், இணையத்தில் தேடி ஆர்டர் செய்து சாப்பிடுவோர் அதை விட அதிகம் என கடையின் நிர்வாகி சொல்கிறார். விடுமுறை இல்லாமல் வருடத்தின் எல்லா நாட்களிலும் இயங்கும் இட்லிஸ் உணவகம், புதிய உணவு வகைகளை தேடுசெல்லும் ஆர்வமுடையவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக