இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் பிராண்டு, லண்டனில் உள்ள மிகவும்
புகழ்பெற்ற ஹாம்லேஸ் பொம்மை நிறுவனத்தை 67.96 மில்லியன் பவுண்டுக்கு (அதாவது
ரூ.621.15 கோடி) விலைக்கு வாங்கியதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது இதை
முழுமையாக கையகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
நிறுவனம் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை வாங்குவதற்கான ஒரு
உறுதியான உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த நிலையில் ரிலையன்ஸ்
இன்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் ஹாம்லேஸ் குளோபல் நிறுவனத்தின் மாஸ்டர் உரிமையாளராகவும்
29 நகரங்களில் 88 அங்காடிகளை இயக்கியும் வந்தது. ஆனால் தற்போது 100 சதவிகித பங்கினையும்
கையகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பல வர்த்தகங்களில் கொடி கட்டி பறக்கும் இந்த
நிறுவனம், இனி பொம்மை வியாபாரத்திலும் கொடி கட்டி பறக்கலாம் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் உலகளாவிய ரீதியில்
ஹாம்லேஸ் நிறுவனத்துக்கு 18 நாடுகளில் சுமார் 167 கடைகள் உள்ளன.
இந்திய வல்லுனர்களின் கருத்துப்படி இந்த ஹாம்லேஸ் பொம்மை
நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் 10,000 கோடி ரூபாய் எனவும், இது இன்னும் 2 - 7
ஆண்டுகளில் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்தியாவில் அதிகளவிலான குழந்தைகளின் எண்ணிக்கை இந்த
வருவாயை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறதாம். இதனால் அடுத்து வரும் 3
ஆண்டுகளுக்குள் 200 கடைகளாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளதாம் இந்த நிறுவனம்.
இந்தியச் சந்தையில் பொம்மை விற்பனை மதிப்பு 2018-ம் ஆண்டு 150
கோடி டாலராக இருந்தது. 2011 முதல் 2018 வரையான காலத்தில் 15.9% வளர்ச்சி
கண்டுள்ளது. 2024-ம் ஆண்டு இந்தியாவில் பொம்மை விற்பனை மதிப்பு 303 கோடி டாலராக
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பல வர்த்தகங்களில் கால் பதித்துள்ள ரிலையன்ஸ்
நிறுவனம், ஹாம்லேஸ் நிறுவனத்தை வாங்குவதன் மூலம் பொம்மை விற்பனையிலும் தனி இடம்
வகிக்கும் என்றும் கருதப்படுகிறது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக