இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தொண்டையில்
வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படுவதால் வலி ஏற்படுகிறது. தொண்டை வலி அதிகம்
ஏற்படும் போது மருத்துவரை அணுகுவது நல்லது.
தொண்டையில்
புண் இருந்தால் அரிப்பு மற்றும் கரகரப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த
தொண்டை வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டால் எளிதில் குணமடைந்துவிடும். இதை
கவனிக்காமல் விட்டுவிட்டால் நோய் தொற்று பரவி அதிக வலியை ஏற்படுத்தும்.
மேலும் தொண்டை வறட்சி, குரல் கரகரப்பு, காய்ச்சல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்த
வைரஸ் தொற்றானது சுகாதாரமற்ற தண்ணீரை குடித்தல் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை
உட்கொள்ளுதல் போன்றவற்றால் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த நோய் தொற்று
அதிகமாகும் போது தொண்டையில் வீக்கம் ஏற்படும் இதனால் எச்சில் விழுங்கும் போது
வலியை ஏற்படுத்தும்.
தொண்டையில்
நோய் தொற்று இருக்கும் போது இதமான சூட்டில் சுத்தமான திரவ உணவுகள் அதாவது
தண்ணீர்,சூப் போன்ற உணவுகளை எடுத்து கொள்ளுதல் நல்லது. மேலும் இந்த தொண்டை
கரகரப்பு நீங்க சுடு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து கொப்பளிக்க வேண்டும். இதனால்
தொண்டையில் ஏற்பட்டுள்ள நோய் தொற்று நீங்கும். மேலும் குளிர்ந்த உணவுகளை
தவிர்ப்பதன் மூலம் இந்த நோய் தொற்று ஏற்படுவதை தடுக்க முடியும். தொண்டையில் வலி
அதிகம் ஏற்படும் போது உடனடியாக மருத்துவரை அனுகுவது நல்லது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக