இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒரு நாள் சோமு என்பவர் தன் அலுவலகப் பணிக்காக வேறு இடத்திற்குச் செல்வதற்காக ஆட்டோ ஒன்றை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தார்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஒரு ஆட்டோ வந்ததும் அதில் ஏறினார். பின் சிவப்பு விளக்கு சிக்னல் காட்டவே, சாலையில் சென்ற வாகனங்கள் அச்சிவப்பு நிறத்திற்கு மதிப்புக் கொடுத்து ஒன்றன் பின் ஒன்றாக நின்றது.
அப்போது சோமு சென்ற ஆட்டோ நடைப்பாதையை ஒட்டி நிறுத்தப்பட்டது. அந்தப் போக்குவரத்து நெரிசலில், ஊனமுற்ற கால்களுடன் நடக்க இயலாத நிலையில் ஒரு இளைஞன், சிக்னலில் இருந்தவர்களிடம், ஐயா, தர்மம் பண்ணுங்க சாமி. உழைக்க இயலாத நிலையில் உள்ள பாவி சார் நான். பெரிய மனசு பண்ணி யாரேனும் தர்மம் செய்யுங்களேன். உங்களுக்கு கோடி புண்ணியம் வந்து சேரும் எனக் கூறியவாறு பிச்சைக் கேட்டுக் கொண்டு வந்தான்.
இவ்வாறு ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு வந்த இளைஞன் நடைப்பாதை அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஓட்டுநரிடமும் பிச்சைக் கேட்டான். அவர் இல்லை என்பது போல் சைகை காட்டினார்.
ஆனால், ஆட்டோவில் அமர்ந்திருந்த சோமு 30 ரூபாய் கொடுத்தார். அந்த இளைஞன் சென்றதும், 'ஏன்பா! ஒரு நாளைக்கு 300 ரூபாயாவது சம்பாதிப்பாய் தானே. அதில் 3 ரூபாய் கொடுத்தால் குறைந்தா போய் விடுவாய்?" என்று ஆட்டோ ஓட்டுனரிடம் கடிந்து கொண்டார்.
அச்சமயம் பச்சை விளக்கு எரிந்ததும், சோமு கூறியதைக் காதில் வாங்காததைப் போல் வண்டியை ஓட்ட ஆரம்பித்தார். அந்த ஆட்டோவில் பயணித்த சோமுவிற்கு அது மேலும் கோபத்தைத் தூண்டியது. கடைசியாக சோமு இறங்க வேண்டிய இடம் வந்தது.
ஆட்டோ நின்றதும் சோமு பணத்தை நீட்டினார். பணத்தை வாங்கிய ஓட்டுனர், 'சில்லறை இல்லை சார்" என்றார். அந்த இளைஞனுக்கு உதவாததையும், இவர் பேச்சை சட்டை செய்யாத செயலையும் மனதில் வைத்து திட்டிக்கொண்டு இருந்த சோமு, ஆட்டோ ஓட்டுனரை பார்த்து 'ஏன்யா! கை, காலெல்லாம் நல்லாத்தானே இருக்கு? நீயே சென்று சில்லறை வாங்கி வந்து தந்துவிடு!" என்றார்.
உடனே ஓட்டுநர் சிறிதும் தயங்காதவராய், இருக்கைக்கு கீழ் சாய்த்து வைத்திருந்த தன் ஊன்றுகோல்களை கையில் எடுத்துக் கொண்டார். தன் உடலை, ஊன்றுகோல்களின் உதவியால் சுமந்து சென்று சில்லறை வாங்கி வந்தார்.
இதைப் பார்த்த சோமு குற்ற உணர்வுடன், அவரை எதிர்நோக்க இயலாமல் மனவருத்தத்தில் தவித்தார். உண்மை தெரியாமல் ஆட்டோ ஓட்டுனரை திட்டியதை நினைத்து மனம் வருந்தினார். பின்பு மனவருத்தத்துடன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடைபெற்றார்.
நீதி:
உள்ளத்தில் ஊனம் இல்லாதவர், உடலில் மட்டும் எப்படி ஊனமுற்றவராக இருக்க முடியும்? உழைக்க நினைக்கும் உன்னத உள்ளம் கொண்டவர்களுக்கு ஊனம் என்பது ஒரு தடை அல்ல.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக