>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 22 ஜூலை, 2019

    அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்- தஞ்சாவூர்

      Related image

     

     

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    மூலவர் : எழுத்தறிநாதர்

    தல விருட்சம் : செண்பகமரம் மற்றும் பலா மரம் உள்ளது.

    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது.

    ஊர் : இன்னம்பூர்.

    மாவட்டம் : தஞ்சாவூர்.

    தல வரலாறு :

    அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில் எனப் பெயர் வந்ததற்கு காரணம் அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றது தான். அக்காலத்தில் சோழ மன்னனின் கணக்கரான சுதன்மன் ஒரு முறை காட்டிய கணக்கில் சந்தேகம் ஏற்பட்டது. உரிய கணக்கை சரியாகக் காட்டும்படி கடுமையான உத்தரவிட்டார். சரியான கணக்கு காட்டியும், தன் மீது பழி வந்துவிட்டதே என எண்ணிய அவர், சிவபெருமானை வேண்டினார்.

    உடனே சிவபெருமான் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று ஐயத்தைப் போக்கினார். சுதன்மன் சற்றுநேரம் கழித்து கணக்குடன் செல்லவே, ஏற்கனவே காட்டிய கணக்கை மீண்டும் ஏன் காட்ட வருகிறீர்? என மன்னன் கேட்டார். அதற்கு சுதன்மன் தனக்குப் பதிலாக இறைவனே வந்து கணக்கு காட்டிய விபரத்தை மன்னனிடம் எடுத்துரைத்தார். வருத்தப்பட்ட மன்னன், சுதன்மனிடம் மன்னிப்பு கேட்டதுடன், சிவபெருமானுக்கு கோயிலும் எழுப்பினார்.

    ஆகையால் அக்கோயிலுக்கு எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அட்சரம் என்றால் எழுத்து. இது சுயம்புலிங்கம் என்பதால் தான் தோன்றீயீசர் என்றும் பெயர் உள்ளது. அகத்தியருக்குத் இறைவன் இலக்கணம் உபதேசித்த தலம் இது.

    அம்பாள் கொந்தார் குழலம்மை என்னும் சுகந்த குந்தலாம்பாளுக்கு தனி சன்னதியும், நித்திய கல்யாணி அம்மனுக்கு தனி சன்னதியும் மொத்தம் இரண்டு அம்பாள் சன்னதிகள் உள்ளன. சூரியன் இத்தலத்தில் வழிபட்டு அதிக ஒளியைப் பெற்றான். அவனுக்கு இனன் என்றும் பெயர் உண்டு. இறைவனை சூரியன் நம்பி வழிபட்டதால் இனன் நம்பு ஊர் என்று பெயர் ஏற்பட்டு இன்னம்பூர் என்று மாறிவிட்டது.

    தல பெருமை :

    இக்கோயில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். விஞ்ஞானத்தின் அடிப்படையில் லிங்கம் மீது சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1 மற்றும் 2, பங்குனி 13, 14, 15 தேதி காலையில் விழுகிறது. இதனை சூரிய பூஜையாக கருதுகிறார்கள்.

    பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :

    குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கு முன் இங்கு வந்து அர்ச்சனை செய்தால் குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். மேலும் குழந்தை பாக்கியத்துக்காக இங்குள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறினால் சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்வார்கள். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜையும் செய்வார்கள்.

    திருவிழா :

    நவராத்திரி பூஜை பத்து நாட்கள் நடைபெறும் மற்றும் சித்திரையில் கோடாபிஷேகம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருவாதிரை, சிவராத்திரி ஆகியவை முக்கியமான விழாக்கள் ஆகும்.

    திறக்கும் நேரம் :

    காலை 7 மணி முதல் நற்பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

    முகவரி :

    அருள்மிகு எழுத்தறிநாதர் கோயில்,
    இன்னம்பூர் - 612 303.
    தஞ்சாவூர் மாவட்டம்.
    போன் :  91 435 2000157, 96558 64958.

    கோயிலிற்கு செல்ல வேண்டிய வழி :

    கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் ரோட்டில் புளியஞ்சேரிக்கு வடக்கே 2 கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக