திங்கள், 22 ஜூலை, 2019

உப்பு மூட்டை

Image result for உப்பு மூட்டை!!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


விளையாட்டு என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. ஓடி விளையாடும் குழந்தைகளுக்கு நன்றாகப் பசியெடுக்கும். பொதுவாகவே, விளையாட்டில் ஆர்வமுள்ள குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டுகள் பல இருக்கின்றன. அதில் ஒரு விளையாட்டுதான் 'உப்பு மூட்டை".

எத்தனை பேர் விளையாடலாம்?

இந்த விளையாட்டை எத்தனை குழந்தைகள் வேண்டுமானாலும் சேர்ந்து விளையாடலாம். விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

எப்படி விளையாடுவது?

விளையாடும் குழந்தைகள் இரண்டு இரண்டு பேராக 'ஜோடி" அமைத்துக்கொள்ள வேண்டும். அவரவருக்கு மிகவும் பிடித்தவருடன் சேர்ந்துகொண்டு 'ஜோடி" அமைத்துக்கொள்ளலாம். 'ஜோடி" சேர்ந்த பிறகு, விளையாட்டைத் தொடங்க வேண்டும்.

விளையாட்டு தொடங்கும் இடத்தில் ஒரு தொடக்கக் கோடு போட்டுக்கொள்ள வேண்டும். தொடங்கும் இடத்திலிருந்து 50 அடி அல்லது 60 அடி தூரத்தில் ஒரு முடிவுகோடு வரைந்து கொள்ள வேண்டும்.

தொடக்கக் கோட்டின் மேல் அனைவரும் காலை வைத்துக்கொண்டு, விளையாடத் தயாராக இருக்க வேண்டும்.

'ரெடி" என்று சொன்னதும், தொடக்கக்கோட்டில் நிற்கும் ஜோடியில் ஒருவர் குனிந்துகொள்ள, அவரின் முதுகின்மேல் இன்னொருவர் உப்பு மூட்டையாக ஏறிக்கொள்ள வேண்டும். (அதாவது, குனிந்துகொண்டவர் முதுகில் ஏறி, கழுத்தை இரு கைகளாலும், அவரது இடுப்பை இரு கால்களாலும் பின்னிக்கொள்ள வேண்டும்).

உப்பு மூட்டையாக தூக்கிக் கொண்டவர், முடிவு கோட்டை நோக்கி வேகமாக ஓடவேண்டும். கோட்டை தொட்டதும், அப்படியே உப்பு மூட்டையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அதாவது, உப்பு மூட்டையாக முதுகில் ஏறியிருந்தவர் குனிந்துகொள்ள, குனிந்து இருந்தவர் உப்பு மூட்டையாக ஏறிக்கொள்ள வேண்டும்.

இப்போது முடிவு கோட்டிலிருந்து தொடங்கிய இடத்தை நோக்கி, மறுபடியும் ஓடி வரவேண்டும். இதில், முதலில் வரும் ஜோடியே வெற்றிபெற்ற ஜோடி ஆகும்.

விதிமுறை :

உப்பு மூட்டையை தூக்கிக்கொண்டு ஓடும்போது, உப்பு மூட்டையாக முதுகில் இருப்பவரின் கால்கள் தரையை தொட்டுவிட்டாலோ அல்லது அவர் நழுவி கீழே விழுந்துவிட்டாலோ அந்த ஜோடி 'அவுட்".

பலன்கள் :

உடல் ஆரோக்கியம் மேம்படும்.

இலக்கை அடையும் திறன் வளரும்.என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்