இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான பொருள்கள்:- துவரம் பருப்பு ஒரு கப்
- வாழைக்காய் 2
- பெரிய வெங்காயம் 2
- பச்சை மிளகாய் 6
- மஞ்சள் தூள் அரை சிறிய ஸ்பூன்
- கடுகு ஒரு சிறிய ஸ்பூன்
- உளுந்து ஒரு சிறிய ஸ்பூன்
- புளி ஒரு பெரிய எலுமிச்சை அளவு
- தக்காளி 2
- கறிவேப்பில்லை தேவையான அளவு
- கொத்துமல்லி தேவையான அளவு
- எண்ணெய் 4 சிறிய ஸ்பூன்
- தண்ணீர் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- வாழைக்காயை தோல் சீவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- அத்துடன் வெங்காயம் , தக்காளி, பச்சை மிளகாய் ஆகிய இவற்றையும் கழுவி நன்றாகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- கருவேப்பில்லை, கொத்துமல்லி ஆகிய இவைகளை ஆய்ந்து நன்கு கழுவிக் கொள்ளவும்.
- பிறகு கூடியவரையில் தண்ணீர் இல்லாதபடி வடிய விட்டுக் கொள்ளவும்.
- புளியை முன்னமே தண்ணீரில் ஊற வைத்து வடித்துக் கொள்ளவும்.
- மஞ்சள் தூளை சேர்த்து துவரம் பருப்பு, வாழைக்காய், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும் (ஞாபகம் இருக்கட்டும் துவரம் பருப்பு குழையக் கூடாது).
- புளியைப் பச்சை வாசனை போகும் வரையில் நன்கு கொதிக்க விட வேண்டும். பிறகு மேற்கண்டவற்றுடன் சேர்க்கவும்.
- பின்னர் எண்ணெய்யை காய வைத்துக் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை, கொத்துமல்லி ஆகிய இவை அனைத்தையும் தாளித்து மேற்கண்ட பதார்த்தத்தில் கொட்டவும். (மல்லியை அழகுக்காக கடைசியில் கூட நீங்கள் தூவி இறக்கலாம்)
- இதோ இப்போது சுவையான வாழைக்காய் பச்சடி தயார்.
- வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக