>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 4 ஜூலை, 2019

    கடவுளின் கைகள் பிடித்திருக்கும் தங்க பாலம்


    Image result for கடவுளின் கைகள் பிடித்திருக்கும் தங்க பாலம்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    இவ்வுலகில் மனிதனால் உருவாக்கப்பட்ட பல அதிசயங்கள் உள்ளன. அந்தவகையில் மனிதனால் உருவாக்கப்பட்ட கடவுளின் கைகள் தாங்கி பிடித்திருக்கும் ஓர் அதிசய பாலத்தைதான் நாம் பார்க்க இருக்கிறோம்.

    தொங்கு பாலத்தின் மீது பயணிப்பது என்றால் அனைவருக்கும் ஆர்வம் கொண்ட பயணமாகத்தான் இருக்கும். அதேசமயம் மனதில் ஒருவிதமான பயமும் கலந்திருக்கும்.

    பாலத்தின் நடுவில் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் கீழ்நோக்கிப் பார்த்தால் அனைவரது வயிற்றிலும் (கிர்ரென்று) ஒருவிதமான மாற்றத்தை உணரமுடியும்.

    ஆனால், இந்த பாலத்தில் பயணம் செய்யும்போது கடவுளின் கைகள் நம்மை தாங்கி பிடித்திருக்கிறது என்ற ஒரு நம்பிக்கை ஏற்படும். ஏனென்றால் இந்த பாலத்தின் பெயரே கடவுளின் கைகள் கொண்ட பாலம்.

    100 ஆண்டுகள் பழமையான கடவுளின் பாலம் :

    வியட்நாமில் டானாங் அருகில் இருக்கும் பானா மலைப்பகுதியில் உள்ள காவ் வாங்க் கோல்டன் பாலம் 100 ஆண்டுகளை கடந்திருந்தாலும் தற்போது உலகம் முழுக்க பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    இதற்கு காரணம் இந்த பாலத்தை தாங்கி பிடிப்பது போல, பெரிய இரண்டு கைகள் கட்டப்பட்டு இருப்பதுதான். இதனால் இந்த பாலம் கடவுளின் கைகள் கொண்ட பாலம் என்று அழைக்கப்படுகிறது.

    இரண்டு கைகள் விரிந்து வந்து பாலத்தை தாங்கி பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் அங்கிருக்கும் மலையில் இருந்து வருவது போல கான்கிரீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பாலம், கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. டிஏ லேண்ட்ஸ்கேப் நிறுவனத்தை சேர்ந்த வு வியட் ஆன் இதை வடிவமைத்திருக்கிறார்.

    இந்த கோல்டன் பாலம் ஏற்கனவே கட்டப்பட்டது. இதில் இருக்கும் கை பகுதிதான் இப்போது கட்டப்பட்டது.

    150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் பிரெஞ்ச் காலணி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பாலமாகும்.

    இதன் புகைப்படம் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.

    இந்த அதிசய பாலத்தை காண பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

    என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
    உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
    உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக