இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
மூலவர் : கல்யாண விகிர்தீஸ்வரர், கல்யாண விகிர்தேஸ்வரர்.
தல விருட்சம் : வில்வ மரம் உள்ளது.
பழமை : 1000 - 2000 வருடங்களுக்கு முன்பு.
ஊர் : வெஞ்சமாங்கூடலூர்.
மாவட்டம் : கரூர்.
தல வரலாறு :
முன்னொரு காலத்தில், தேவர்களின் தலைவனான இந்திரன், கவுதம மகரிஷியின் மனைவி அகலிகை மீது ஆசை கொண்டான். அவளை அடைவதற்காக சமயம் பார்த்து காத்திருந்த அவன், ஒரு நாள் விடியும் முன்பே கவுதமர் ஆசிரமத்திற்கு சென்றான்.
சேவல் வடிவம் எடுத்து கூவினான். அதைக்கேட்ட கவுதமர் விடிந்து விட்டது என எண்ணி ஆற்றிற்கு நீராடச் சென்றுவிட்டார். அப்போது, இந்திரன் கவுதமரின் வடிவம் எடுத்து ஆசிரமத்திற்குள் புகுந்தான். அவனை, தன் கணவர் என்றெண்ணிய அகலிகை, பணிவிடைகள் செய்தாள்.
இதனிடையே ஆற்றிற்கு சென்ற கவுதமர் பொழுது சரியாக விடியாமல் இருந்ததைக் கண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்திருப்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு திரும்பினார். கவுதமரைக் கண்ட இந்திரன், பூனை வடிவம் எடுத்து தப்ப முயன்றான்.
பின் இங்கு நடந்த நிகழ்ச்சிகளை ஞானதிருஷ்டியில் அறிந்த கவுதமர், அவனது உடல் முழுதும் கண்ணாக மாறும்படி சபித்து விட்டார். சாபம் பெற்ற இந்திரன் பூலோகத்தில் பல சிவதலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி தான் செய்த பாவத்திற்கு விமோசனம் தேடினான்.
இத்தலத்திற்கு வந்த இந்திரன், சிவனை வணங்கி தவம் செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தகுந்த காலத்தில் சாபம் நீங்கப்பெறும் என்றார். அவன் தனக்கு காட்சி தந்து அருளியது போலவே, இங்கிருந்து அனைவருக்கும் அருளவேண்டுமென சிவனிடம் வேண்டினான். சிவனும், சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.
தல பெருமை :
இத்தலத்தின் கருவறையில் விகிர்தீஸ்வரர் நாகாபரணத்தின் கீழ் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி காட்சி தருவது இதன் சிறப்பாகும்.
பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடன் :
திருமண தோஷம், புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம். குறிப்பாக பெண்களின் கோபத்திற்கு ஆளானவர்கள் அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள், அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்தும், திருக்கல்யாணம் செய்து வைத்தும் வழிபடுகின்றனர்.
திருவிழா :
மாசி மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை மற்றும் மகாசிவராத்திரி ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
முகவரி :
அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோவில்,
வெஞ்சமாங்கூடலூர்- 639 109,
கரூர் மாவட்டம்,
போன் : 91- 4324 - 262 010, 238 442, 99435 27792.
செல்லும் வழி :
கரூரில் இருந்து அரவக்குறிச்சி செல்லும் சாலையில் 13 கி.மீ., தொலைவில் ஆறு சாலை பிரிவிற்கு சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் இக்கோவிலை அடையலாம். குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கரூரில் இருந்து நகர பேருந்துகள் செல்கின்றன.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக