Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 4 ஜூலை, 2019

உயிர் கொடுத்தல்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


தற்போதைய காலக்கட்டத்தில் எல்லா வீடுகளிலும் அலைபேசிதான் குழந்தைகளின் விளையாட்டுத் திடலாக உள்ளது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பள்ளியிலும் படிப்பு, படிப்பு என்று மட்டுமே கூறி பள்ளியிலும் விளையாடுவது இல்லை. வீட்டிலும் விளையாடுவது இல்லை.

ஆனால் கிராமப்புறங்களில் விளையாடும் விளையாட்டுகள் குழந்தைகளுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத்தருவதாக இருக்கின்றன.

அவ்வாறு கிராமங்களில் சிறுவர், சிறுமியர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்றுதான் உயிர்கொடுத்தல். இந்த விளையாட்டில் ஓடியாடுவதும் உண்டு. உட்கார்ந்து விளையாடுவதும் உண்டு.

எத்தனை பேர் விளையாடலாம்?

இந்த விளையாட்டை எத்தனை பேர் வேண்டுமானாலும் ஒன்றாக சேர்ந்து விளையாடலாம்.

எப்படி விளையாடுவது?

விளையாட்டை தொடங்கும் முன், முதல் போட்டியாளரை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்.

முதல் போட்டியாளரை தேர்வு செய்த பிறகு, விளையாட்டை தொடங்கலாம்.

திறந்தவெளி மைதானத்தில் விளையாடப் போகும் சிறுவர்கள் நின்றிருப்பார்கள்.

விளையாட்டு துவங்கியதும் முதல் போட்டியாளர் மைதானத்தில் இருக்கும் சிறுவர்களை துரத்த வேண்டும்.

அவர் தொட்டுவிடாமல் இருக்க, சிறுவர்கள் அங்குமிங்குமாய் ஓடுவார்கள். யாராவது ஒருவரைத் தொடுவது போல் பக்கத்தில் அவர் வரும்போது, அவருக்கு நெருக்கமாக இன்னொருவர் பின்பக்கமாய் வர, அவரைத் தொட்டுவிடும் ஆசையில், முதலில் துரத்தியவரையும் தவறவிடுவார்.

யாரையாவது மிக நெருக்கமாய் தொடுவதற்கு போனால், அவர்கள் சட்டென தரையில் உட்கார்ந்துகொண்டு, 'பாஸ்" என்பார்கள்.

அதன்பிறகு அவர்களைத் தொடக்கூடாது. தொட்டாலும் அவர்கள் 'அவுட்" கிடையாது. அடுத்து, வேறு யாரையாவதுதான் போட்டியாளர் துரத்திச் செல்ல வேண்டும்.

பாதியில் உட்கார்ந்தவர் மீண்டும் விளையாட வேண்டுமானால், விளையாடி கொண்டிருப்பவர்களில் யாராவது ஒருவர் உட்கார்ந்திருப்பவருக்கு உயிர் கொடுக்க வேண்டும். அப்படி உயிர் கொடுத்துவிட்டால், மீண்டும் அவர் விளையாட்டைத் தொடரலாம்.

துரத்துபவர் வேறு யாரையாவது தொடுவதற்கு முயற்சி செய்துகொண்டே, 'பாஸ்" சொல்லிவிட்டு உட்கார்ந்திருப்பவர் மீதும் ஒரு கண் வைத்துக்கொண்டே துரத்த வேண்டும்.

யாராவது அவரை தொட்டு அவருக்கு உயிர் கொடுக்க முயற்சிப்பார்கள். அப்படி வருபவரைத் தொட்டுவிட வேண்டும்.

போட்டியாளர் யாரையாவது தொட்டுவிட்டால், 'அவுட்". அப்படி அவுட் ஆன நபர் போட்டியாளராய் மாறி, மற்றவர்களை துரத்தி பிடிக்க வேண்டும்.

பயன்கள் :

கால்கள் வலுப்பெறும்.

உதவும் மனப்பான்மை மேலோங்கும்.

இலக்கை நிர்ணயிக்கும் திறன் மேம்படும்.



என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!