இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
புதுக்கோட்டை மாவட்டத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் சித்தன்னவாசல். இவ்வூர் குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கு மிகவும் புகழ்பெற்றவை.
சித்தன்னவாசல் திருச்சியிலிருந்து ஏறத்தாழ 49கி.மீ தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 18கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சிறப்புகள் :
சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாய் நமது ஊர்களில் பல கோவில்கள் வானுயர்ந்து நிற்கும் போது, ஓவியக் கலைக்கு தனித்து மிக கம்பீரமாய் நிற்கிறது சித்தன்னவாசல் குகை ஓவியங்கள். இதன் பெருமைகளுக்கும், புகழுக்கும் காரணம், இந்த குகை ஓவியங்களின் தனித்தன்மை தான்.
குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை.
புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாக சித்தன்னவாசல் ஓவியங்களும் திகழ்கின்றது. இது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மூலம் பராமரிக்கப்படுகிறது.
இந்த குகைகளை மக்கள் பார்வையிடுவதற்கு மிக முக்கியமான காரணம் இங்குள்ள ஓவியங்கள் ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டின்போது ஜைன துறவிகள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், அதிலுள்ள மாயவித்தைகளைத் தவிர மற்ற இரகசியங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
சித்தன்னவாசலில் உள்ள சமணர்படுக்கைகள் மற்றும் சமணர் கோவில்கள் ஆகியவை சேர்ந்து ஏழடி பட்டம் என அழைக்கப்படுகிறது.
இந்திய ஓவியக்கலை வரலாற்றில் அஜந்தா குகை ஓவியத்திற்கு அடுத்ததாக புகழ்பெற்ற ஓவியங்கள் அங்கு அமைந்துள்ளது. தமிழர்களின் கலை பண்பாட்டினை பறைசாற்றும் உயிரோட்டமுள்ள ஓவியங்களாக இவை திகழ்கின்றன.
ஓர் அழகிய குளத்தில் தாமரை மலர்கள், அல்லி மலர்கள், மீன்கள் நீந்துவது போலவும் எருமைகள் நிற்பது போலவும், யானைகள் தண்ணீர் குடிப்பது போலவும், கீரிப்பிள்ளை விளையாடுவது போலவும், அரசன் அரசியின் ஓவியங்களும் தத்ரூபமாக அமையப்பெற்றுள்ளது.
பழங்கால ஓவியம், அந்த ஓவியம் அமைந்துள்ள குகைக்கோவில், அதன் பிறகு சில பல சமணர் படுக்கைகள், மிகப் பழமையான கல்வெட்டுகள் என்று அனைத்தும் ஓரிடத்தில் காணக்கிடைக்கின்றன. இவை அனைத்தும் நமது பாரம்பரியத்திற்கு சமணர்களின் பங்களிப்பாகும்.
சுற்றுலாப் பயணிகளின் பொழுதுப்போக்கிற்காக இங்கு சிறுவர் பூங்காவும், இசை நீருற்றுகளும் சுற்றுலாத்துறை சார்பாக நிறுவப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள படகு குளத்தில் பயணம் செய்து மகிழ்கின்றனர்.
எப்படி செல்வது?
புதுக்கோட்டையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம் வழியாக :
திருச்சி விமான நிலையம்.
ரயில் வழியாக :
புதுக்கோட்டை ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
புதுக்கோட்டையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
அறிவர் கோவில்.
ஏழடி பட்டம்.
நவ சுனை.
புதைவிடம்.
இதர சுற்றுலாத்தலங்கள் :
திருமயம் கோட்டை.
புதுக்குளம் பூங்கா.
அருங்காட்சியகம்.
விராலிமலை முருகன் கோவில்.
நார்த்தாமலை.
கொடும்பாலூர்.
மலையடிப்பட்டி.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக