Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 22 ஜூலை, 2019

டாக்டர் ராதாகிருஷ்ணன்

 Image result for டாக்டர் ராதாகிருஷ்ணன்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

கல்வியாளர் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதெல்லாம் இவரது பெயரை உச்சரிக்க மறந்ததில்லை.

ஆசிரியருக்கெல்லாம் ஆசிரியராகவும், அரசியல்வாதிகளுக்கெல்லாம் ஆசானாகவும் விளங்கியவர்.

இவர் யார் என்பதை யோசித்து விட்டீர்களா?

அவர்தான் ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி, பாரத நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த

டாக்டர் ராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் நாள் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவு குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கையும், கல்வியும் :

தெலுங்கு மொழியைத் தாய்மொழியாக கொண்ட ராதாகிருஷ்ணன் அவர்கள், தன் இளமைக்காலத்தைத் திருத்தணியிலும், திருப்பதியிலும் கழித்தார்.

ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்ததால், அவரது கல்வியை உதவித்தொகை மூலமாகவே தொடர்ந்தார்.

தனது ஆரம்பக் கல்வியைத் திருவள்ள ரிலுள்ள 'கௌடி" பள்ளியிலும், பின்னர் திருப்பதியிலுள்ள 'லூத்தரன் மிஷன் உயர் பள்ளியிலும்" படித்தார்.

அவர் வேலூரிலுள்ள ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்த பின், சென்னையிலுள்ள கிறிஸ்துவர் கல்லூரிக்கு மாறினார்.

இவர் தன் ஏழ்மையின் காரணமாக தன் தூரத்து உறவினர் படித்த தத்துவவியல் புத்தங்கள் கிடைத்ததைக் கொண்டு தத்துவவியல் படிப்பைத் தேர்ந்தெடுத்தார்.

தத்துவத்தை முதல் பாடமாக தேர்ந்தெடுத்த அவர், அதில் இளங்கலை (பி.) மற்றும் முதுகலைப் பட்டமும் (எம்.) பெற்றார்.

இவர் தனது முதுநிலைக் கல்வியின் போது வேதாந்த நெறிமுறைகள் என்னும் தலைப்பில் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டார். இதுவே இந்து மதம் மற்றும் தத்துவம் பற்றி அறிய அடிப்படையாக அமைந்தது.

இல்லற வாழ்க்கை :

ராதாகிருஷ்ணன் தன்னுடைய தூரத்து உறவினரான சிவகாமு, என்பவரை தம்முடைய 16-ம் அகவையில் மணம் புரிந்தார். இது பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டத் திருமணமாகும்.

இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், சர்வபள்ளி கோபால் என்ற மகனும் உள்ளனர். சர்வபள்ளி கோபால், இந்திய வரலாற்று தொடர்பான துறையில் முக்கியமானவர்களில் ஒருவர். சிவகாமு 1956-ம் ஆண்டு இறந்தபோது ராதாகிருஷ்ணனுடைய 56 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவு பெற்றது.

டாக்டர் ராதாகிருஷ்ணனின் ஆசிரியர் பணி!!

முதுகலை பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன் அவர்கள், 1909ல் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். இவர் இளம் வயதிலேயே புத்தகங்களை ஆழ்ந்து படிக்கும் திறமை கொண்டவர். படித்ததை பற்றி சிந்திப்பது இவருக்கு கல்வியில் பலமான அடித்தளம் அமைக்க உதவின.

பாட நூல்களை தவிர வேதாந்தம், அரசியல் விடுதலை சம்பந்தப்பட்ட நூல்களையும் கற்று தேர்ந்தார். கல்லூரியில், அவர் இந்துமத இலக்கிய தத்துவங்களான உபநிடதங்கள், பகவத் கீதை, பிரம்மசூத்ரா மற்றும் ராமானுஜர், மாதவர் போன்றோரின் வர்ணனைகளையும் கற்று தேர்ந்தார்.

ஆதி சங்கரரின் அத்வைத கொள்கையை படித்து பரவசமானார். பைபிள், ஐரோப்பிய சிந்தனைகள், ஆங்கில இலக்கியங்களில் ஊறித் திளைத்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். வேதாந்த கருத்துகளை தனி அணுகுமுறையுடன் ராதாகிருஷ்ணன் விளக்கி கூறுவார்.

இவர் புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, நம் நாட்டில் அறிமுகப்படுத்தினார்.

மேலை நாடுகளுக்கு செல்லாமல், நம் நாட்டிலேயே படித்த ஒருவர் என்ற பெருமையுடைய சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களை, பல நாடுகள் கவர்ந்து இழுத்தன. தத்துவமேதையான இவர், இந்திய மோகத்தை அன்றைய நாளிலே அந்நிய மண்ணில் விதைக்க காரணமாக இருந்தார்.

இவரைப்பற்றி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் இப்பர்ட் ஜோன்ஸ் கூறுகையில், 'டாக்டர் ராதாகிருஷ்ணனின் பார்வையில் மாயாஜாலம் உள்ளது. அவரின் சொற்பொழிவில் இன்னிசை தேனாக இனிக்கிறது. முகத்தில் ஒளி வீசுகிறது" என்று புகழ்ந்துரைத்தார்.

1918ல், மைசூர் பல்கலைக்கழகத்திலும், 1921ல் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் படைப்பான 'இந்திய தத்துவம்" வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரிய தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகும்.

மைசூர் பல்கலைக்கழகத்தில் இருந்து அவர் கொல்கத்தா புறப்பட்டபோது, அவருக்கு அளிக்கப்பட்ட பிரிவு விழாவின்போது, ரயில் நிலையம் வரை குதிரை வண்டியில் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மாணவர்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு, தங்களுக்கு மிகவும் பிடித்த பேராசிரியர் ராதாகிருஷ்ணனை தாங்களே வண்டியை இழுத்து கொண்டு ரயில் நிலையம் வரை சென்று அனுப்பி வைத்தனர். இதைக்கண்டு பொதுமக்கள் வியந்தனர். மாணவர்கள் அளித்த பிரிவு உபசார விழாவைக் கண்டு ராதாகிருஷ்ணன் மனம் நெகிழ்ந்தார். 'கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு" என்பதை உணர்த்துவதாக இந்த நிகழ்வு அமைந்தது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக