இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நமது முன்னோர்களின் செயல்களில் பலவிதமான அதிசயங்கள் இருப்பதை உங்கள் கண் முன்னே காட்டும் ஒரு முயற்சிதான் இது.
நெல்லையப்பர் கோவில் :
திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லையப்பர் கோவிலில் கல் தூண்களை தட்டினால் 'சரிகமபதநி" என்ற ஏழு இசையின் சுரங்களின் சத்தம் கேட்கும். இந்த தூண்கள் அனைத்தும் கற்களால் கட்டப்பட்டவை. இதில் இருந்து வரும் இசை சுரங்களின் சத்தம் எப்படி என்பது இதுவரை கண்டறியப்படாத உண்மையாக இருக்கிறது.
குண்டடம் வடுகநாத பைரவர் கோவில் :
திருப்பூரில் அமைந்துள்ள இந்த குண்டடம் வடுகநாத பைரவர் கோவிலில் ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் இருக்கும்போது எந்த மாதத்தில் எந்த வடிவத்தில் இருக்கும் என்பதை பற்றி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கற்களில் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன் கோவில் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பூகோல சக்கரத்தில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் பற்றியும், அதை பாதுகாப்பதற்கான வழிகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 20ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் ஓசோன் படலத்தின் முழுத் தகவல்களையும் நம் முன்னோர்கள் 700 ஆண்டுகளுக்கு முன்னறே குறிப்பிட்டுள்ளார்கள்.
ராணி உதயமதி :
குஜராத் மாநிலம், பதான் என்ற ஊரில் உள்ள ராணி கீ வாவ் என்ற அரண்மனையை, ஷாஜகான் தாஜ்மகாலை கட்டுவதற்கு முன்பே, ராணி உதயமதி அவர்கள் தனது கணவர் பீம்தேவ்காக தாஜ்மகாலை விட அழகாகவும் மிகவும் பிரமாண்டமாகவும் ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கினார்.
இந்த நினைவுச் சின்னத்தின் பெயர் ராணி கீ வாவ். இந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். இந்தியாவில் கிணற்று வடிவில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்டமான அரண்மனைதான் ராணி கீ வாவ். இந்த ராணி கீ வாவ் அரண்மனையில் 30 கிலோமீட்டர் தொலைவில் சுரங்கப்பாதை உள்ளது.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக